தம்பி நா.முத்துக்குமாருக்குத் தாலாட்டு நாள் வாழ்த்து! கவிஞர் அறிவுமதி உருக்கம்!!

தமிழ்த் திரையுலகிலும் இலக்கிய உலகிலும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமாருக்கு அவரின் பிறந்த நாளில் உருக்கமான தாலாட்டுநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கவிஞர் அறிவுமதி தனக்குத் தாயும் தந்தையுமானவர் என்று நா.முத்துக்குமார் சொல்லுவார். அறிவுமதியின் 73 அபிபுல்லா சாலைதான் தன்னுடைய அடையாளம் என்று ஒரு புத்தகத்தை அந்த வீட்டின் பெயருக்கு அர்ப்பணித்தவர் நா.முத்துக்குமார். தம்பி முத்துக்குமார் என உருக்கத்துடன் அழைத்து, அவருக்குத் தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவிப்பதுபோல் குரல் வழியாக கவிஞர் அறிவுமதி கூறியுள்ள தாலாட்டு
 

தம்பி நா.முத்துக்குமாருக்குத் தாலாட்டு நாள் வாழ்த்து! கவிஞர் அறிவுமதி உருக்கம்!!தமிழ்த் திரையுலகிலும் இலக்கிய உலகிலும் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் கவிஞர் அறிவுமதி, நா.முத்துக்குமாருக்கு அவரின்  பிறந்த நாளில் உருக்கமான தாலாட்டுநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

கவிஞர் அறிவுமதி தனக்குத் தாயும் தந்தையுமானவர் என்று நா.முத்துக்குமார் சொல்லுவார். அறிவுமதியின் 73 அபிபுல்லா சாலைதான் தன்னுடைய அடையாளம் என்று ஒரு புத்தகத்தை அந்த வீட்டின் பெயருக்கு அர்ப்பணித்தவர் நா.முத்துக்குமார்.

தம்பி முத்துக்குமார் என உருக்கத்துடன் அழைத்து, அவருக்குத் தொலைபேசி வழியாக வாழ்த்து தெரிவிப்பதுபோல் குரல் வழியாக கவிஞர் அறிவுமதி கூறியுள்ள தாலாட்டு நாள் வாழ்த்து விவரம் வருமாறு,

 “தம்பி நா.முத்துக்குமார் அண்ணாவின் உறவிலிருந்து கிடைத்த தம்பி. காஞ்சிப் பட்டிலிருந்துக் கிடைத்த கைத்தறி. நெசவிலிருந்துப் பட்டாடை தான் வரும் என்பார்கள், பாட்டாடையும் வரும் என்று சொன்னவன் என் தம்பி முத்துக்குமார்.

வைரமுத்து, கபிலன் நிரலில் பச்சையப்பன் கல்லூரி தந்த கவிதைக்காரன். எங்கள் 73 அபிபுல்லா சாலை எனும் படைப்பு தோப்பில் சாந்தகுமார் எனும் இசையமைப்பாளரிடம் சளைக்காமல் எழுதி எழுதிப் பயிற்சி எடுத்த பாடலாசிரியன்.

தம்பி நா.முத்துக்குமாருக்குத் தாலாட்டு நாள் வாழ்த்து! கவிஞர் அறிவுமதி உருக்கம்!!

சட்டென தாயை இழந்த என் தம்பி காஞ்சி எனும் நூலூரில் தந்தையின் நூலகக்காட்டில் நுழைந்து திரிந்து வளர்ந்த அறிவுக்காரன். உலக இலக்கிய மரபுகள் கற்றவன். உலக திரைப்பட இலக்கண, இலக்கியத் தெளிவுகள் பெற்றவன்.

எழுத்தாளர் சுஜாதா, இயக்குனர் பாலுமகேந்திரா இவனுடைய கூடுதல் வெளிச்சத்திற்குத் தாய்மை தெளித்தவர்கள். இயக்குனர்கள் லிங்குசாமி, செல்வராகவன், விஜய், ராம் அழகழகான சூழல்கள் தந்து இவன் இசைத்தமிழைப் பிழிந்து கொண்டவர்கள். 

இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஜீ.வி.பிரகாஷ் தம்பியின் பாடல் தமிழள்ளிப் பக்குவமாய் பயன்படுத்திக் கொண்டவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். ஆனந்த விகடன், குங்குமம் போன்ற இதழ்களில் இவன் எழுத்தால் அழகு செய்த உறவுகள் காலம் நெடுக இவனைக் கருணையோடு சுமக்க நெடுநாள் விருப்பம் தெரிவித்து இருப்பவர்கள்.

தம்பி முத்து, என் உயிருக்கு இனிய முத்துக்குமார், உன்னைப் பெற்றவுடன் தாய் போய்விட்டாள். அந்த அம்மாவே உனக்கு மகளாகப் பிறந்தவுடன் நீ போய் விட்டாய். மகன்- தந்தையாய் அவனுக்கு நிறைய நாள் கொடுத்தாய். அதே உன் மகன் உன் மகளுக்குத் தந்தைபோல் இருந்துத் தாய்போல் நிழல் கொடுப்பான். அம்மாவால் வளர்க்கப்பட்டாலும் உன் பிள்ளைகள் உன் பிள்ளைகளாய் உயர்ந்து செழிப்பார்கள்.

தம்பி நா.முத்துக்குமாருக்குத் தாலாட்டு நாள் வாழ்த்து! கவிஞர் அறிவுமதி உருக்கம்!!

என் அன்புத் தம்பி முத்துக்குமார், வெளிச்சம் விரும்பாமல் ஒதுங்கி வாழ விரும்புகின்ற என் பெயருக்கு, நன்றி மறவாத தம்பியாய் பாலா போலவே, நீ கொஞ்சம் அதிகமாகவே எனக்கு வெளிச்சம் கொடுத்திருக்கிறாய்.

இன்று உனக்குத் தாலாட்டு நாள். தம்பி நா.முத்துக்குமார், நீ உடலால் எமை விட்டுப் பிரிந்து இருக்கலாம். ஆனால் உயிரோட்டமுள்ளத் தமிழால்  தமிழுள்ள வரை நீ தகதகதகவென ஒளிசூடி வாழ்வாய். 

வாழ்கடா தம்பி.. வாழ்க என் உயிர் முத்துக்குமார்.வாழ்க. அண்ணன் அறிவுமதியின் தாலாட்டுநாள் வாழ்த்துகள்.”

இவ்வாறு கவிஞர் அறிவுமதி, கவிஞர் நா.முத்துக்குமார் உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web