ரஜினி கூட்டணியில் பாமக.. “பாபா” படத்தை எரித்துத் தொடங்கிய “ஊடல்” நட்பு!

ரஜினிகாந்த் தலைமையில் உருவாகும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார். ஆங்கில நாளேடு ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள தமிழருவிமணியன் ரஜினி கட்சியின் தொடக்கம், மாநாடு, சுற்றுப்பயணம் என்று கூறிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி ரஜினி கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று கூறியுள்ளார். ரஜினி கூட்டணியில் சேரப்போகும் முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பது முக்கியத்துவம் பெறுகிறது. வட மாவட்டங்களில் வன்னியர் வாக்காளர்களுடன் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் பா.ம.க தற்போது
 

ரஜினி கூட்டணியில் பாமக..  “பாபா” படத்தை எரித்துத் தொடங்கிய “ஊடல்” நட்பு!ஜினிகாந்த் தலைமையில் உருவாகும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம் பெறும் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

ஆங்கில நாளேடு ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள தமிழருவிமணியன் ரஜினி கட்சியின் தொடக்கம், மாநாடு, சுற்றுப்பயணம் என்று கூறிவிட்டு பாட்டாளி மக்கள் கட்சி ரஜினி கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்று கூறியுள்ளார்.

ரஜினி கூட்டணியில் சேரப்போகும் முதல் கட்சி பாட்டாளி மக்கள் கட்சி என்பது முக்கியத்துவம் பெறுகிறது. வட மாவட்டங்களில் வன்னியர் வாக்காளர்களுடன் பலம் வாய்ந்த கட்சியாக கருதப்படும் பா.ம.க தற்போது அதிமுக அணியில் இடம் பெற்றுள்ளது. தொல் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக அணியில் இடம் பெற்றுள்ளதால் பா.ம.க அங்கு இடம் பெறுவது சாத்தியமில்லை.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கப் போவதில்லை என்பதால், திமுகவுக்கு மாற்றாக ரஜினி கூட்டணியை பாமக நம்பக்கூடும். தற்போதைய அரசியல் சூழ்நிலைகளும் மு.க.ஸ்டாலின் – ரஜினி என்றே மாறிவருகிறது. இந்நிலையில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது பாமகவுக்கு சாத்தியமில்லை என்பதால் ரஜினி பக்கம் செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

ரஜினிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்த பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கூத்தாடிகள் அரசியலுக்கு வரக்கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்தவரும் ஆவார். ரஜினி – பாமக மோதல் பாபா பட வெளியீட்டின் போது உச்சத்தைத் தொட்டது. வட மாவட்டங்களில் பாபா திரையிடப்பட்ட தியேட்டர்களில் வன்முறை வெடித்தது. பாபா படப்பெட்டியை எடுத்துச் சென்று தீ வைத்து கொளுத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டை ரஜினிகாந்த் எடுத்தார். ஒரு வேளை பாமகவினர் வெற்றி பெற்றால் அது அவர்கள் பூர்வ ஜென்ம பலன் என்றும் கூறினார் ரஜினிகாந்த். பாமகவினர் அனைவரும் வெற்றி பெற்றனர்.

எதிரும் புதிருமாக இருந்த பாமக – ரஜினி விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட்டவர் பாமக இளைஞரணி செயலாளார் டாக்டர். அன்புமணி ராமதாஸ். மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது, ரஜினிகாந்த் படங்களில் சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் பிறகு வெளிவந்த சந்திரமுகி, சிவாஜி என வரிசையாக வெளிவந்த படங்களில் ரஜினி சிகரெட் பிடிக்கும் காட்சிகள் இல்லை. 

ரஜினிக்கு நன்றி தெரிவிதார் அன்புமணி. மகள் திருமணத்திற்கு அன்புமணிக்கு நேரில் அழைப்பு விடுத்தார் ரஜினிகாந்த். அன்புமணி ராமதாஸுக்கும் ரஜினிக்கும் நெருக்கம் வளர்ந்தது. அரசியல் அறிவிப்பை வெளியிட்ட நேரத்தில் அன்புமணி ராமதாஸின் தொலை நோக்கு திட்டங்கள் தனக்கு பிடித்துள்ளதாக பாராட்டினார். தற்போது ரஜினி கட்சியுடன் பாமக கூட்டணிக்கு தயாராகி உள்ளது. ஒரு வேளை அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கிடைத்தாலும் கிடைக்கக் கூடும்.

– மணி

https://A1TamilNews.com

From around the web