குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!

இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் வேளையில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்கை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர் காணொளி காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அந்த உரையில் உலக நாடுகள் அனைத்தும் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றுக்கு புத்தரின் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும் . அவரைப் போல ஞானத்தை
 

குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை!இந்தியா முழுவதும் கொரோனாவிற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் வேளையில் குரு பூர்ணிமாவை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் நடைபெற்ற கருத்தரங்கை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரதமர்  காணொளி காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அந்த உரையில் உலக நாடுகள் அனைத்தும் பெரும்  சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இவற்றுக்கு புத்தரின் கொள்கைகள் மூலமே தீர்வு காண முடியும் . அவரைப் போல ஞானத்தை வழங்கும் ஆசிரியர்களை இந்த நாளில் நினைவுகூறுவோம்.

அகிம்சை, நல்லெண்ணம், நம்பிக்கை போன்ற  புத்தரின்  அறிவுரைகளை ஏற்று நடப்போம். தற்போதைய சூழ்நிலையில் அவை நமக்கு நல்வழியை காட்ட உதவும் என்று பிரதமர் தெரிவித்தார்.

புத்தரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வந்தால் அனைத்து  சவால்களையும் எளிதாக முறியடிக்கலாம் என மோடி தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web