ஆம்பன் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி!

வட இந்தியாவில் மேற்கு வங்காளத்தை கவிழ்த்துப் போட்ட ஆம்பன் புயல் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவையும் ஆம்பன் புயல் விட்டுவைக்கவில்லை. புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலையோர மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சாரக் கம்பங்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 80 பேர். மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
 

ஆம்பன் புயல் சேதங்களை நேரில் பார்வையிட்ட   பிரதமர் மோடி!ட இந்தியாவில் மேற்கு வங்காளத்தை கவிழ்த்துப் போட்ட ஆம்பன் புயல் பல பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவையும் ஆம்பன் புயல் விட்டுவைக்கவில்லை. புயலின் தாக்கம் அதிகம் இருந்ததால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலையோர மற்றும் குடியிருப்புப் பகுதிகளிலும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

மின்சாரக் கம்பங்கள் அறுந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆம்பன் புயலால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 80 பேர். மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் இன்று பார்வையிட்டார்.மேற்கு வங்கத்தை பார்வையிட வந்த பிரதமரை கொல்கத்தா விமானநிலையத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜியும், ஆளுநரும் வரவேற்றனர்.

அதே சமயம் கொரோனாவிலிருந்து காத்துக் கொள்வதற்காக முகக் கவசம் அணிந்திருந்தனர்.

A1TamilNews.com

From around the web