பிரதமர் முதல் சாமானியர் வரையிலும் ஒரே விதி தான்! பிரதமர் மோடி உரை!!

பிரதமர் முதல் சாமானியர் வரையிலும் நமது நாட்டில் ஒரே விதிமுறைதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது, “நாடு முழுவதும் ஊரட்ங்கிலிருந்து இரண்டாம் கட்ட தளர்வுகள் தொடங்கியுள்ளது. இந்த கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் பருவ மழைக்காலமும் தொடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருக்கும் என்பதால் மக்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று
 

பிரதமர் முதல் சாமானியர் வரையிலும் ஒரே விதி தான்! பிரதமர் மோடி உரை!!பிரதமர் முதல் சாமானியர் வரையிலும் நமது நாட்டில் ஒரே விதிமுறைதான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது,

“நாடு முழுவதும் ஊரட்ங்கிலிருந்து இரண்டாம் கட்ட தளர்வுகள் தொடங்கியுள்ளது. இந்த கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்கும் சூழலில் பருவ மழைக்காலமும் தொடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் காய்ச்சல், சளி உள்ளிட்ட நோய் பாதிப்புகள் இருக்கும் என்பதால் மக்கள்  மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.
 
ஊரடங்கு உத்தரவை பல இடங்களில் சரியாக பின்பற்றவில்லை என்று தெரிய வந்துள்ளது.. இப்போது நாம் செய்யக்கூடிய சிறிய தவறுகளுக்கு பின்னால் நாம் மிகப்பெரிய விலையை கொடுக்க நேரிடும். சரியான நேரத்தில் கொண்டுவரப்பட்ட முழு முடக்கத்தால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. நாட்டில் ஏழை மக்கள் யாரும் பசியால் வாடக்கூடாது. பிற நாடுகளுடம் ஒப்பிடும் போது நாம் கொரோனாவை சிறப்பாக எதிர் கொண்டுள்ளோம்/
 
20 கோடி பேருக்கு ஜன் தன் வங்கி கணக்கின் மூலம் உதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் நலத் திட்டங்களால் அமெரிக்காவில் கொரோனா பயனாளிகளை விட 2 மடங்கு மக்கள் பலன் அடைந்துள்ளனர். நவம்பர் வரையிலும் 80 கோடி பேருக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படும்.
 
5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் 1 கிலோ பருப்பும் வழங்கப்படும். ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டம் ஏழை புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பயனளித்து வருகிறது. இலவச பொருட்களுக்காக அரசுக்கு கூடுதலாக 90 ஆயிரம் கோடி செலவாகும். 
 
விவசாயிகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கிராமப் புறங்களில், வளர்ச்சியை ஏற்படுத்த ரூ,50,000 கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வேளாண் துறையில் வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது

வரி செலுத்துவோர் உரிய நேரத்தில் வரியை செலுத்துவதால்தான், ஏழைகள் பசியின்றி வாழ முடிகிறது. தற்சார்பு பாரத திட்டத்தை செயல்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்

 
ஊரடங்கின்போது விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஊராட்சித் தலைவரோ, பிரதமரோ விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடித்தாக வேண்டும். பிரதமர் முதல் சாமானியர் வரையிலும் ஒரே விதி தான்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

From around the web