விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை அடைகிறது – பிரதமர் மோடி!

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை அடைகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் விக்ரம் விணகலம் நிலவில் தரையிரங்கும் காட்சியை நேரடியாக காண்பதற்காக இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். தரைஇறங்குவதற்கு மிகக்குறைவான தூரமே இருந்த நிலையில் விக்ரம் விண்கலம் தகவல் தொடர்பை இழந்தது. பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நாடு நமது விஞ்ஞானிகளால் பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார். பின்னர் ட்விட்டர் மூலம் “இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்தார். அவர்களுடைய முழு
 

விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை அடைகிறது – பிரதமர் மோடி!

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விஞ்ஞானிகளால் இந்தியா பெருமை அடைகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்

விக்ரம் விணகலம் நிலவில் தரையிரங்கும் காட்சியை நேரடியாக காண்பதற்காக இஸ்ரோ மையத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்தார். தரைஇறங்குவதற்கு மிகக்குறைவான தூரமே இருந்த நிலையில் விக்ரம் விண்கலம் தகவல் தொடர்பை இழந்தது.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். நாடு நமது விஞ்ஞானிகளால் பெருமை அடைகிறது என்று குறிப்பிட்டார்.

பின்னர் ட்விட்டர் மூலம் “இஸ்ரோ தலைவர் தகவல் தெரிவித்தார். அவர்களுடைய முழு முயற்சியையும் திறம்பட செயல்படுத்தியுள்ளார்கள். இந்திய விஞ்ஞானிகள் எப்போதுமே இந்தியாவை பெருமை கொள்ள வைத்துள்ளார்கள். நாம் இன்னும் உறுதியோடும் துணிச்சலோடும் செயல்பட வேண்டிய தருணம் இது.  நம்பிக்கையுடன் நமது விண்வெளிப் பயணத்தை தொடர்வோம்,” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிறகு இஸ்ரோவுக்கு சந்திராயான் – 2 இறங்குவதை நேரடியாக காண வந்திருந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.

”தரையிறங்குவதற்கு 2.1 கிலோமீட்டர் தூரமே இருக்கும் வரையில் எல்லாமும் சாதாரணமாகவே இருந்தது. அதன் பிறகு தொடர்பு அறுந்து விட்டது. தகவல்களை ஆராய்கிறோம்,” என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

 

From around the web