ப்ளாஸ்டிக் ஒழிப்பு.. களத்தில் இறங்கிய பிரதமர் மோடி!

மாமல்லபுரம்: காலை நேரம் கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ப்ளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பைகளை தன் கையால் எடுத்து அகற்றியுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த சீன் அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை தந்திருந்தார். முதல் நாள் கடற்கரை கோவிலையும் சிற்பங்களையும் சீன அதிபருக்குச் சுற்றிக் காட்டிய பிரதமர், இரவு மாமல்லபுரத்திலேயே தங்கினார். இரண்டாம் நாள் காலையில் கடற்கரைக்கு நடைபயணம் சென்ற பிரதமர், அங்கே காணப்பட்ட ப்ளாஸ்டிக்
 

ப்ளாஸ்டிக் ஒழிப்பு.. களத்தில் இறங்கிய பிரதமர் மோடி!மாமல்லபுரம்: காலை நேரம் கடற்கரைக்கு நடைப்பயிற்சிக்கு சென்ற பிரதமர் மோடி அங்குள்ள ப்ளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட குப்பைகளை தன் கையால் எடுத்து அகற்றியுள்ளார்.

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்த சீன் அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரதமர் மோடி மாமல்லபுரம் வருகை தந்திருந்தார். முதல் நாள் கடற்கரை கோவிலையும் சிற்பங்களையும் சீன அதிபருக்குச் சுற்றிக் காட்டிய பிரதமர், இரவு மாமல்லபுரத்திலேயே தங்கினார்.

இரண்டாம் நாள் காலையில் கடற்கரைக்கு நடைபயணம் சென்ற பிரதமர், அங்கே காணப்பட்ட ப்ளாஸ்டிக் பாட்டில்கள் உட்பட்ட குப்பைகளை தன் கையால் எடுத்து, ஒரு பையில் சேகரித்தார். அவற்றை தோளில் சுமந்து வந்து கரையில் உள்ளவரிடம் கொடுத்து மறுசுழற்சி குப்பைக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தார்.

ஒரு தடவை மட்டும் பயன்படும் ப்ளாஸ்டிக்கை 2022ம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஒழிப்போம் என்ற கொள்கையை நிறைவேற்றும் முயற்சியில் உள்ளார் பிரதமர் மோடி. மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில், தானே களத்தில் இறங்கி ப்ளாஸ்டிக் குப்பைகளை அகற்றியுள்ளார். 

பிரதமரின் இந்த செயல் சமூகத்தளத்தில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. வெளிநாட்டு ஊடகங்களும் இது குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.

– வணக்கம் இந்தியா

From around the web