‘நீரின்றி அமையாது உலகு’ – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடியின் உரை!

டெல்லி: 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை உருவாக்கி நாடு முழுவதும் செயல்படுத்தினார். இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ள நரேந்திர மோடி அரசு அனைவருக்கும் சுத்தமான குடி தண்ணீர் என்ற திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்காக ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று 73-வது சுந்தந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரை: “நீர் ஆதாரங்களை
 

டெல்லி: 2014 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றவுடன் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை உருவாக்கி நாடு முழுவதும் செயல்படுத்தினார்.

இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்று உள்ள நரேந்திர மோடி அரசு அனைவருக்கும் சுத்தமான குடி தண்ணீர் என்ற திட்டத்தை கையில் எடுத்து உள்ளது. இதற்காக ஜல் ஜீவன் மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இன்று 73-வது சுந்தந்திர தின விழாவில் தேசியக் கொடி ஏற்றி வைத்து ஆற்றிய உரை:

“நீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்காகவும் நதிகள், குளங்களை தூர் வாரவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருவள்ளுவர் என்ற மகான்தான் தண்ணீர் பிரச்சினையைப் பற்றி யாரும் சிந்திக்காத காலத்தில் சிந்தித்தார். நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறினார்.

பல வருடங்களுக்கு முன் ஜெயின் முனிவர் தண்ணீர் விற்பனை செய்யப்படும் என்றார், அவரின் வாக்கு இப்போது பலித்துக் கொண்டு இருக்கிறது.

நீர் பிரச்சினையை தீர்க்க ஜல் ஜீவன் மிஷன் என்ற புதிய திட்டத்தை அறிவிக்கிறேன். ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கு போதிய நிதியும் ஒதுக்க திட்டமிட்டுள்ளோம். ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் தண்ணீர் கொண்டு வர ஜல் ஜீவன் மிஷனுக்கு ரூ .3.5 லட்சம் கோடியை மோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தண்ணீரின் அவசியம் குறித்து இளம் தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முன்னேற்றத்தை அடைய வேண்டுமென்றால் வறுமை ஒழிக்கப்பட வேண்டும். வறுமையில் உள்ளவர்கள் சவால்களை சமாளிக்கும் வழிகளை அறிந்தவர்கள். இன்றளவும் தண்ணீர் வசதி இல்லாத வீடுகள் உள்ளன, நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் கொண்டு வரும் நிலைதான் உள்ளது என கூறினார்.

 

 

– வணக்கம் இந்தியா

From around the web