பிரதமர்,  ஜனாதிபதியுடன் திடீர் ஆலோசனைக் கூட்டம்!

இந்தியா முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய , மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதே வேளையில் இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை கலவரத்தில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது, மேற்கு வங்காளப்புயல், வட மாநிலங்களில் வெள்ளம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மோடி இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவும், எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் திடீரென லடாக் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் இன்று திடீரென ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி
 

பிரதமர்,  ஜனாதிபதியுடன் திடீர் ஆலோசனைக் கூட்டம்!இந்தியா முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மத்திய , மாநில அரசுகளால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதே வேளையில் இந்தியா சீனா எல்லைப் பிரச்சனை கலவரத்தில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது, மேற்கு வங்காளப்புயல், வட மாநிலங்களில் வெள்ளம்  என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மோடி இராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தவும், எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிரதமர் திடீரென லடாக் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் இன்று திடீரென ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தேசிய, சர்வதேச பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

நாட்டின் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பிரதமர், ஜனாதிபதி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

A1TamilNews.com

From around the web