மாமியார் மருமகள் உறவு போல் பாத்துக்குங்க – புது எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை!

டெல்லி: மாமியார் மருமகள் உறவைப் பேணிக்காக்கும் கணவன் போல் பணியாற்ற வேண்டும் என்று பாஜகவின் புது எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். டெல்லியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இரு நாட்கள் வழிகாட்டும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும் போது, “தொகுதியில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களுடன் தொடர்ந்து உறவைப் பேணுங்கள். நீங்கள் புதிய பதவியில் வந்து விட்டதால் அவர்களை புறக்கணிப்பதாக எண்ணிவிடக் கூடாது.
 

டெல்லி: மாமியார் மருமகள் உறவைப் பேணிக்காக்கும் கணவன் போல் பணியாற்ற வேண்டும் என்று பாஜகவின் புது எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார். 

டெல்லியில் பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு இரு நாட்கள் வழிகாட்டும் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும் போது, “தொகுதியில் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்களை மறந்து விடாதீர்கள். அவர்களுடன் தொடர்ந்து உறவைப் பேணுங்கள். நீங்கள் புதிய பதவியில் வந்து விட்டதால் அவர்களை புறக்கணிப்பதாக எண்ணிவிடக் கூடாது. உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள். 

பாராளுமன்றப் பணிகள் உங்களுக்கு இருப்பதால், தொகுதியில் உங்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாது தான். மகனுக்குத் திருமணமாகி மருமகள் வந்ததும் தன்னை மகன் புறக்கணிப்பதாக மாமியார் எண்ணுவது போல் உள்ள சூழ்நிலை தான் இது. மாமியாரையும் மருமகளையும் அணுசரித்துச் செல்லும் கணவன் போல் பாராளுமன்றப் பணிகளையும், தொகுதிப் பணிகளையும் ஒருங்கிணைத்துச் செய்ய வேண்டும்”, என்று பேசியுள்ளார்.

இரு நாள் முகாமில் பாஜக தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா, பாஜக செயல்தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பாஜகவின் புதிய எம்.பி.க்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார்கள். 

 

பாஜகவின் 303 மக்களவை உறுப்பினர்கள் மற்றும் 78 மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளார்கள்.

– வணக்கம் இந்தியா

From around the web