வெளிமாநிலத் தொழிலாளர்கள் – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!

நேற்று நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். ”வெளிமாநிலத் தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா திட்டத்தின் மூலம் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், கட்டமைப்பு மற்றும் நிதியுதவி கிடைக்க உள்ளது. மத்திய உணவு கிட்டங்கிகளிலிருந்து 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும்
 

வெளிமாநிலத் தொழிலாளர்கள் – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள்!நேற்று நடைபெற்ற மத்திய அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

”வெளிமாநிலத் தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மீன்பிடித் தொழிலாளர்களுக்கான முக்கிய திட்டங்கள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா திட்டத்தின் மூலம் மீன்பிடித் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள், கட்டமைப்பு மற்றும் நிதியுதவி கிடைக்க உள்ளது. மத்திய உணவு கிட்டங்கிகளிலிருந்து 8 கோடி புலம் பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் 5 கிலோ வீதம் மே, ஜுன் மாதங்களுக்கு வழங்கப்படும்.

பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்படும் குறைந்த பட்ச ஓய்வூதித் தொகை மேலும் மூன்றாண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web