பன்றி காய்ச்சல் தடுப்பு முறையில் கொரோனாவைத் தடுக்க திட்டம்! ஐசிஎம்ஆர் அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி கண்டறியும் பரிசோதனைகளும் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் வெகு வேகமாக பரவியது. அந்த வைரசுக்க்கான மருந்து மூலக்கூறு வைரலாஜி பரிசோதனை மூலமே கண்டறியப்பட்டது. தற்சமயம் அதனடிப்படையில், கொரோனாவுக்கு எதிரான நுண்ணறிவு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அடையாளம் காணுதல், சிகிச்சை அளித்தல்,தடுப்பு
 

பன்றி காய்ச்சல் தடுப்பு முறையில் கொரோனாவைத் தடுக்க திட்டம்! ஐசிஎம்ஆர் அறிவிப்பு!கொரோனா பரவலைத் தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றன. கொரோனா தடுப்பூசி கண்டறியும் பரிசோதனைகளும் முழுவீச்சில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 10 வருடங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் பன்றி காய்ச்சல் வெகு வேகமாக பரவியது. அந்த வைரசுக்க்கான மருந்து மூலக்கூறு வைரலாஜி பரிசோதனை மூலமே கண்டறியப்பட்டது. தற்சமயம் அதனடிப்படையில், கொரோனாவுக்கு எதிரான நுண்ணறிவு பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அடையாளம் காணுதல், சிகிச்சை அளித்தல்,தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தல், பரிசோதனை மையங்களை அதிகரித்தல் இவை அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

தற்போது இந்தியா முழுவதும் 610 பரிசோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
ஒரே நாளில் 1.4லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.பரிசோதனை கருவிகளையும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறோம் எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web