மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து – இந்து முன்னணி ஆதரவாளர் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தீ விபத்துக்கு காரணமான கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியைச் சார்ந்த லஷ்மணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். தீ விபத்து நடந்து 15 மாதங்கள் கழித்து, எந்த வித ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் உத்தரவிட்டுள்ளனர். மதுரையில் வசிப்பவர், இந்து
 

மதுரை: மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தீ விபத்துக்கு காரணமான கோவில் நிர்வாக அதிகாரி நடராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணியைச் சார்ந்த லஷ்மணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

தீ விபத்து நடந்து 15 மாதங்கள் கழித்து, எந்த வித ஆதாரமும் இல்லாமல் வழக்கு தொடர்ந்துள்ளதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ். சுந்தர் உத்தரவிட்டுள்ளனர்.

மதுரையில் வசிப்பவர், இந்து முன்னணியில் உறுப்பினர், சமூக சேவை செய்பவர் என்று மனுதாரர் கூறியுள்ளார். ஆனால், குறைந்த பட்ச ஆய்வு கூட செய்யாமல், தீ விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கையையும் இணைக்காமல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தீ விபத்து இரவு நடந்துள்ளது. அது விபத்து என்று நம்புவதற்கு காரணங்கள் உள்ளது. எந்த வித முகாந்திரமும் இல்லாமல் விபத்துக்கு எந்த ஒருவரையும் குற்றம் சாட்ட இயலாது.

பொதுநல வழக்கு தொடர்பவர்கள், குறைந்த பட்ச ஆய்வு செய்து தங்கள் மனுவுக்கு ஆதாரமான தகவல்களை இணைக்க வேண்டும். பொதுவாக கூறப்படும் கருத்துகளின் அடிப்படையில் வழக்கு தொடர முடியாது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து நடந்து 15 மாதங்கள் கழித்து இந்து முன்னணியைச் சார்ந்த ஒருவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளது உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது.

 

From around the web