சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு!

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இண்டோரில் மட்டுமே படப்படிப்புகள் நடத்த முடியும். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது. அதே போல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எந்தவிதமான படப்பிடிப்புகளும் நடத்தப்படக் கூடாது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள்
 

சின்னத்திரை படப்பிடிப்புகள் நடத்த அனுமதி! தமிழக அரசு அறிவிப்பு!கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காவது கட்ட ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இண்டோரில்  மட்டுமே  படப்படிப்புகள் நடத்த முடியும். பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடையாது.

அதே போல் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் எந்தவிதமான படப்பிடிப்புகளும் நடத்தப்படக் கூடாது. படப்பிடிப்பு தளத்தில்  நடிகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உட்பட 20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் அவசியமான நேரங்கள் தவிர மற்ற நேரங்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். படப்பிடிப்புத் தளங்களிலும் சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அந்தந்த பகுதிக்குட்பட்ட மாவட்ட ஆட்சியரிடம்  அனுமதி பெற்றிருத்தல் அவசியம். பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. அளிக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.

இதற்கிடையில் ஆந்திர அரசு, தெலுங்கு சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

A1TamilNews.com

From around the web