ரஜினி மீது வழக்கு என்னாச்சு? பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்!

துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த திராவிடர் விடுதலைக் கழகம் வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்கள். வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கு வாபஸ் விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் குறிப்பிட்டுள்ளதாவது, “தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் மிக முக்கியமானவை, பெரியார் மிகப்பெரிய தலைவர் அவர் கொள்கைகளை மறுக்க முடியாது. பெரியார் சிறந்த சமூக சீர்திருத்தவாதி,
 

ரஜினி மீது வழக்கு என்னாச்சு? பல்டி அடித்தார்களா பெரியார் பேரன்கள்!துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசிய பேச்சு சர்ச்சையாக உருவாகியுள்ள நிலையில், அவர் மீது வழக்கு தொடர்ந்த திராவிடர் விடுதலைக் கழகம் வழக்கை திரும்பப் பெற்றுள்ளார்கள்.

வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் வழக்கு வாபஸ் விவகாரம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் மிக முக்கியமானவை, பெரியார் மிகப்பெரிய தலைவர் அவர் கொள்கைகளை மறுக்க முடியாது. பெரியார் சிறந்த சமூக சீர்திருத்தவாதி, சமூகநீதிக்காக போராடியவர், மக்களுக்கு விழிப்புணர்வூட்டியவர். ஒட்டுமொத்த மக்களின் உயர்வுக்கு பாடுபட்டவர். அப்படியான தலைவர் மீது களங்கம் கற்பிக்கும் நோக்கோடு யார் பேசினாலும் தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய நீதிபதி அவர்கள், மேலும், நடப்பதே திராவிட இயக்க ஆட்சிதான் நீங்கள் கவலைப்பட தேவையில்லை. தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” (This government is a Dravidian government,why you are afraid ? Nothing Would happened. Don’t worry.they will take appropriate action) என்று நீதிபதி ராஜமாணிக்கம் அவர்கள் தெரிவித்தார்.

அரசுத்தரப்பும் கணம் நீதிபதி அவர்களின் கருத்தையே வலியுறுத்தியது. வழக்கு விசாரணையின்போது வழக்கின் எதிர் மனுதாரரான தமிழக அரசின் காவல் துறையின் சார்பில், புகார் மனு அளித்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் காவல்துறைக்கு புகார் மீதான நடவடிக்கை எடுக்க கால அவகாசம் தேவை என நீதிமன்றத்தில் கேட்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவர்கள் காவல்துறைக்கு நடவடிக்கை எடுப்பதற்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் புகார் அளித்த நாளில் இருந்து 15 நாட்களாவது ஆனபின்பு காவல்துறை இந்த புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை வழங்கவில்லை என்றால் இன்னும் ஒரு வாரம் கழித்து நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் உத்தரவிட்டு தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற அனுமதியளித்தார்.

நீதிமன்ற நடைமுறையின் அடிப்படையிலும், ஒரு வாரத்திற்கு பிறகு கழகத்தின் புகார் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்கின்ற நீதியரசரின் உத்தரவை ஒட்டியும் கழகத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற அனுமதியளித்தததின் காரணமாகவும் வழக்கு தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை நீதிமன்றம் அளித்துள்ள கால அவகாசத்திற்குள் ரஜினிகாந்த் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து தக்க சட்ட நடவடிக்கைகளை  மேற்கொள்ளும் என்று நம்புகிறோம் அப்படி எடுக்கத் தவறும் பட்சத்தில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவின் படி இன்னும் ஒரு வாரம் கழித்து திராவிடர் விடுதலைக் கழகம் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்.

தந்தை பெரியார் அவர்களின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் மீது சட்ட நடவடிக்கை பாயும் வரை நமது சட்டப் போராட்டம் தொடரும்”

இவ்வாறு திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கூறப்பட்டுள்ளது.

http://A1TamilNews.com

From around the web