மக்கள் விரோத வங்கிகள் ஒழியட்டும்!

“மோசமான திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில் சாகடித்துவிடும்”. – Keynes மோடி அரசும் அவரது ஆசியுடன் வங்கிகளும் மக்களைச் சாகடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். மூன்று முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் ரூ 25 கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னபோதே, அவரவர் ஸ்டேட் வங்கிக் கணக்குகளை நிரந்தரமாக மூடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் இன்னும் கொஞ்சம் துணிந்து, ஏடிஎம்மில் பணம் எடுத்தாலே ஒவ்வொரு முறையும்
 

மக்கள் விரோத வங்கிகள் ஒழியட்டும்!

“மோசமான திட்டங்கள் குறுகிய காலத்தில் மிகப் பெரிய மன அழுத்தத்தை மக்களுக்குத் தரும்.. நீண்ட காலத்தில் சாகடித்துவிடும்”. – Keynes

மோடி அரசும் அவரது ஆசியுடன் வங்கிகளும் மக்களைச் சாகடிக்கும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர்.

மூன்று முறைக்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் ரூ 25 கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொன்னபோதே, அவரவர் ஸ்டேட் வங்கிக் கணக்குகளை நிரந்தரமாக மூடியிருக்க வேண்டும். அதைச் செய்யாததால் இன்னும் கொஞ்சம் துணிந்து, ஏடிஎம்மில் பணம் எடுத்தாலே ஒவ்வொரு முறையும் ரூ 25 கட்டணம் பிடுங்குவேன் என்று கொக்கரித்து நிற்கிறது அந்த வங்கி.

‘இல்லை.. தவறாக வந்துவிட்டது பழைய கட்டண நிலை தொடர்கிறது’ என இப்போது விளக்கம் வந்திருக்கிறது. சொல்வதற்கில்லை.. ‘ஒரு ட்ரையல் பார்க்கலாம்’ என்று கூட அறிவித்திருக்கலாம். இப்போது இல்லாவிட்டாலும், பின்னர் அமல்படுத்தும் திட்டமிருக்கலாம்!

அதற்கு முன் இதுபோல தான் தோன்றித்தனமாகக் கட்டணம் வசூலித்து மக்களிடமே பிக்பாக்கெட் அடிக்கும் வங்கிகளிலுள்ள கணக்குகளை மூடிவிடுவதே உத்தமம். பழைய சேமிப்பு முறைக்கே மாறிவிடலாம் போலிருக்கிறது. திவாலாகும் கட்டத்தில் இருந்தால் அத்தகைய வங்கிகள் மொத்தமாகத் தொலையட்டும். மக்களின் பணத்தில் இவை மஞ்சக் குளிக்கக் கூடாது.

வங்கிகளை மக்கள் தள்ளி வைக்க வேண்டிய கட்டாயத்தைக் கொண்டு வந்திருக்கும் மோடி அரசு, இன்னும் என்னென்ன அட்டூழியங்களை அரங்கேற்றப் போகிறதோ!

– முதன்மை ஆசிரியர்

From around the web