‘வாகனங்களில் கட்சிக் கொடி கட்டலாமா?’ – நீதிமன்றம் கேள்வி; ‘சட்டத்தில் இடமில்லை’ – அரசு பதில்!

மதுரை: சாலை விபத்துகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, கூடுதல் வெளிச்சம் தரும் எல்இடி பல்புகள் பொருத்தப்படுகின்றன என்று தொடரப்பட்ட பொது நலவழக்கில், வாகனங்களுக்கு கட்சிக் கொடி கட்ட அனுமதி உண்டா என்றும் அரசிடம் கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். “நெடுஞ்சாலைகளை பராமரிக்க சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள், சாலை பராமரிப்பு செய்வதில்லை. இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்குகள்,
 

மதுரை: சாலை விபத்துகளை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, கூடுதல் வெளிச்சம் தரும் எல்இடி பல்புகள் பொருத்தப்படுகின்றன என்று தொடரப்பட்ட பொது நலவழக்கில், வாகனங்களுக்கு கட்சிக் கொடி கட்ட அனுமதி உண்டா என்றும் அரசிடம் கேள்விகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்துள்ளார். “நெடுஞ்சாலைகளை பராமரிக்க சுங்கம் வசூலிக்கும் தனியார் நிறுவனங்கள், சாலை பராமரிப்பு செய்வதில்லை. இணைப்பு பகுதியில் ஹைமாஸ் விளக்குகள், வளைவுகளில் சிவப்பு எச்சரிக்கை விளக்குகள், சாலையின் நடுவே அரளிச்செடிகள் நடுவது என எதையும் செய்வதில்லை.

தடை செய்யப்பட்ட எல்இடி பல்புகள் வாகனங்களில் பொருத்தப்படுகிறது. அதிகமான பல்புகளும் பொருத்தப்படுவதால் எதிரே வரும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகிறது. இந்த காரணங்களினால் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றது. உயிர்ச்சேதமும் அதிகரித்துள்ளது. எனவே சாலைகளை சரியாக பராமரிக்க உத்தரவிடவேண்டும்,” என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர், சாலைகளை பராமரிக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?, எல்இடி பல்புகளையும், அதிக எண்ணிக்கையில் பல்புகளையும் பொருத்த மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறதா? என்று உள்துறை செயலரும், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேலும், அரசியல் கட்சிகளின் கொடிகளையும், தலைவர்களின் படங்களையும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்த மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறதா என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்கள். வாகனங்களில் உள்ள கட்சிக் கொடிகளும், தலைவர் படங்களும் பொதுமக்களையும் காவல்துறையினரையும் மிரட்டும் வகையில் இருக்கிறது. இதை தடை செய்தாலே 50 சதவீத குற்றங்கள் குறைந்து விடும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மீண்டும் இன்று, செவ்வாய்கிழமை விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசியல்வாதிகள் தங்களது வாகனங்களில் கட்சிக் கொடி கட்டுவதற்கு மோட்டார் வாகன சட்டத்தில் இடமில்லை. தலைவர்களின் படங்களை வைத்துக்கொள்ளவும், தங்களது பதவிகளை வாகனங்களில் பெரிதாக எழுதி கொள்ளவும் அனுமதி இல்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

– வணக்கம் இந்தியா

From around the web