பரியேறும் பெருமாள் விமர்சனம்

நடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து, தங்கராஜ், ஆர்கே ராஜா, கராத்தே வெங்கடேசன் ஒளிப்பதிவு: ஸ்ரீதர் இசை: சந்தோஷ் நாராயணன் தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ் இயக்கம்: மாரி செல்வராஜ் ‘கல்விதான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே ஆயுதம். அதைத் துணைக்கொண்டு முன்னேறிவிட்டால், சமூகம் உன்னைக் கேள்வி கேட்காது, கையெடுத்துக் கும்பிடும்,’ என்றார் அண்ணல் டாக்டர் அம்பேத்கர். ‘ஓ… கல்வியைக் கொண்டு முன்னேறிவிடுவாயா… நாங்கள் அதற்கு வழி விட்டால்தானே’ என்று அதையும் ஆரம்பத்திலேயே கிள்ளிஎறியத் துடிக்கம் ஆணவசாதிக்காரர்கள் இன்னும்
 

பரியேறும் பெருமாள் விமர்சனம்

நடிகர்கள்: கதிர், ஆனந்தி, யோகிபாபு, லிஜீஷ், மாரிமுத்து, தங்கராஜ், ஆர்கே ராஜா, கராத்தே வெங்கடேசன்

ஒளிப்பதிவு: ஸ்ரீதர்

இசை: சந்தோஷ் நாராயணன்

தயாரிப்பு: நீலம் புரொடக்ஷன்ஸ்

இயக்கம்: மாரி செல்வராஜ்

‘கல்விதான் ஒடுக்கப்பட்ட மக்களின் ஒரே ஆயுதம். அதைத் துணைக்கொண்டு முன்னேறிவிட்டால், சமூகம் உன்னைக் கேள்வி கேட்காது, கையெடுத்துக் கும்பிடும்,’ என்றார் அண்ணல் டாக்டர் அம்பேத்கர்.

‘ஓ… கல்வியைக் கொண்டு முன்னேறிவிடுவாயா… நாங்கள் அதற்கு வழி விட்டால்தானே’ என்று அதையும் ஆரம்பத்திலேயே கிள்ளிஎறியத் துடிக்கம் ஆணவசாதிக்காரர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். அந்த சாதி ஆணவத்துக்குக் கொடுக்கப்பட்ட
சாட்டையடிதான் பரியேறும் பெருமாள்.

இந்தப் படம் பரியன் என்கிற பரியேறும் பெருமாளின் கதை மட்டுமல்ல… காலங்காலமாய் ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஒரு பெரும் சமூகத்தின் வலி நிறைந்த வரலாறு. கறுப்பியில் தொடங்கி, அந்த கடைசி இரண்டு டீ க்ளாஸ் வரை இந்தப் படம் நெடுகிலும் ஒவ்வொரு காட்சியும் இதயத்தை வருடும், ரணமாக்கும், ஆவேசப்படுத்தும்…

பரியேறும் பெருமாள் விமர்சனம்

படத்தின் நாயகன் கதிர் பரியனாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த சின்ன வயதில் இத்தனை அழுத்தமான பாத்திரத்தைச் சுமக்க ஒரு மன உறுதியும் பக்குவமும் வேண்டும். மாரி செல்வராஜ் துணையிருக்க, தன் பாத்திரத்தை அத்தனை இயல்பாக நடித்து முடித்திருக்கிறார் கதிர்.

ஆனந்தி இதுதான் தன் முதல்படம் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். பெருமையாகவே அப்படிச் சொல்லிக் கொள்ளலாம். அத்தனை சுத்தமான வேடம். கச்சிதமாகச் செய்திருக்கிறார்.

ஆர் கே ராஜா, கராத்தே வெங்கடேசன், மாரிமுத்து மற்றும் தங்கராஜ்… இந்த நான்கு பாத்திரங்களும் படத்தின் தூண்கள் என்றால் மிகையல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தளத்தில் நின்று விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக ஆனந்தியின் தந்தை மாரிமுத்துவும் கதிரின் அப்பா தங்கராஜும்… இவர்கள் யாரோ அல்ல… இப்போதும் நாம் கிராமங்களில் ரத்தமும் சதையுமாகப் பார்க்கும் ஜீவன்கள்.

படத்தின் மிகப் பெரிய ரிலாக்ஸ் யோகி பாபு. பெரிய அளவில் இல்லை என்றாலும் அவர் வரும் காட்சிகளில் கனத்துக் கிடக்கும் மனசு லேசாகிறது.

கோட்டாவில் சேர்ந்தால் ஒரு கல்லூரியில் என்னென்ன அவமானங்கள் நேர்கின்றன என்பதை சும்மா காட்சியாகப் பார்த்தால் புரியாது… அனுபவித்தால் மட்டுமே புரியும். ஆனால் மாரி செல்வராஜ் அந்த அனுபவத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்குள்ளும் கடத்தியிருக்கிறார்.

பரியேறும் பெருமாள் விமர்சனம்

சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்காக நிறையவே மெனக்கெட்டிருப்பது தெரிகிறது. உயிர்ப்பான இசை, உணர்வு மிக்க பாடல்கள். ஸ்ரீதரின் ஒளிப்பதிவு, செல்வாவின் படத்தொகுப்பு, ஸ்டன்னர் சாமின் ஆக்ஷன்… அனைத்திலும் குறைசொல்ல முடியாத நேர்த்தி.

மாரி செல்வராஜ்… இந்த இளம் வயதில் இத்தனை கனமான திரைக்கதையைச் செய்திருக்கிறார் என்றால் அதன் பின்னுள்ள வலிகளையும் அனுபவங்களையும் புரிந்து கொள்ள முடிகிறது.

பரியேறும் பெருமாள்… படத்தின் தயாரிப்பாளர் பா ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கே பெருமை என நெஞ்சு நிமிர்த்திச் சொல்லலாம்!

Rating: 4.0/5.0

 

From around the web