பள்ளிகள் திறக்கப்படக் கூடாது !மத்திய அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு!

நாடு முழுவதும் ஊரடங்கு நிலை மாறி படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜுலை மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 2.3லட்சம் பெற்றோர்கள் கையெழுத்திட்ட மனு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் படி ஜூலை மாதம் பள்ளிகளை திறக்கப்படுவது இந்தியாவின் வருங்காலத்தை சிதைப்பதற்கு சமம்.
 

பள்ளிகள் திறக்கப்படக் கூடாது !மத்திய அரசிடம் பெற்றோர்கள் கோரிக்கை மனு!நாடு முழுவதும் ஊரடங்கு நிலை மாறி படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஜுலை மாதம் முதல் பள்ளிகளைத் திறக்க மத்திய அரசு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 2.3லட்சம் பெற்றோர்கள் கையெழுத்திட்ட மனு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன் படி ஜூலை மாதம் பள்ளிகளை திறக்கப்படுவது இந்தியாவின் வருங்காலத்தை சிதைப்பதற்கு சமம். கொரோனாவை முற்றிலும் கட்டுப்படுத்தாமல் பள்ளிகள் திறக்கப்படக்கூடாது.

கொரோனாவை ஒழிக்கும் வரையிலோ அல்லது கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரையிலோ பள்ளிகள் திறப்பதை ஒத்திப் போட வேண்டும். அதுவரை ஆன்லைன் வழியாக வீட்டிலிருந்தே கல்வி கற்பதை ஊக்குவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தக் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு வெவ்வேறு பள்ளிகளைச் சார்ந்த பெற்றோர்கள் மாணவர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web