பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகளிடம் இந்த மாற்றத்தை உடனடியா கவனியுங்க!!

உங்கள் வீடுகளில் 2 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் தானே பொம்மைகளுடன் பேசி விளையாடிக் கொண்டே இருக்கிறதா? தற்போது பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுடன் விளையாட யாருமே இல்லை. சிங்கிள் பேபிக்களின் அம்மாக்களே இது உங்களுக்கான பதிவு. நமது பால்யங்களில் நாம் வெட்ட வெளியில் விளையாடித் திரிவோம். அடுத்த தலைமுறை தம்பி, தங்கையுடன் விளையாடியது. ஒரு குழந்தை மட்டும் இருக்கும் இன்றைய பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத நேரங்களில், விளையாடத் துணை
 

பெற்றோர்களே உஷார்! உங்கள் குழந்தைகளிடம் இந்த மாற்றத்தை உடனடியா கவனியுங்க!!ங்கள் வீடுகளில் 2 வயது முதல் 9 வயது வரை உள்ள குழந்தைகள் தானே பொம்மைகளுடன் பேசி விளையாடிக் கொண்டே இருக்கிறதா? தற்போது பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளுடன் விளையாட யாருமே இல்லை. சிங்கிள் பேபிக்களின் அம்மாக்களே இது உங்களுக்கான பதிவு.

நமது பால்யங்களில் நாம் வெட்ட வெளியில் விளையாடித் திரிவோம். அடுத்த தலைமுறை தம்பி, தங்கையுடன் விளையாடியது. ஒரு குழந்தை மட்டும் இருக்கும் இன்றைய பெரும்பாலான வீடுகளில் பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிடாத நேரங்களில், விளையாடத் துணை இல்லாத பொழுது, குழந்தைகள் தனிமையில் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளுக்கு நண்பர்கள் இல்லாத நேரங்களில் தனிமையான சூழலில் இருந்து விடுபடத் தேடி அமைத்துக் கொள்கிற நண்பன் தான் இந்த பொம்மைகள்.

2 முதல் 9 வயது வரை இது மிகவும் சாதாரண விஷயம் தான். இந்தக் காலக்கட்டத்தில், குழந்தைகள் அனைத்து விஷயங்களிலும் சாதாரணமாக ஈடுபட்டு வீட்டில் அனைவரையும் கலாட்டா செய்யும்.

தனக்கெனப் பிடித்த பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டே அலங்காரம் செய்வது, கொஞ்சுவது, அதனுடன் விளையாட்டாகப் பேசுவது போன்ற செயல்பாடுகள் காணப்படுவது இயல்பு.

அதற்குப் பிறகும் அதே நிலை நீடித்தால் குழந்தைகள் பொம்மைகளுடன் கற்பனையாக நட்பை உருவாக்கிக் கொள்ளும். அதனுடனேயே வாழ ஆரம்பிக்கும். அன்றைய நிகழ்வுகள் அனைத்தையும் பொம்மையிடம் கொட்டித் தீர்க்கும். வீட்டில் இருக்கும் அம்மா, அப்பாக்கள் பேசினால் எரிச்சலாகும்.

தன்னுடைய கற்பனை தோழியுடன் மட்டுமே விடாமல் பேசிக் கொண்டே இருக்கும்.
மற்ற விஷயங்களில் ஈடுபாடு குறையும். வெளியில் பெற்றோர்களுடன் செல்ல ஆசை காட்டாது.

இந்த மாற்றம் அவர்களின் மனநிலையில் பயங்கரமான தாக்கத்தை ஏற்படுத்தும். சரியாக கவனிக்கப் படாவிட்டால் விபரீத விளைவுகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம். பெற்றோர்களே உஷார் 9 வயதிற்குப் பிறகு சாதாரண சராசரி நபர்களைப் போல உங்கள் குழந்தைகளை நடத்துங்கள்.அவர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். வயதால் மட்டுமல்ல அறிவாலும் வளர விடுங்கள்.

A1TamilNews.com

From around the web