மன்றம் வேறு… கட்சி வேறு… ரசிகர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்துகிறாரா ரங்கராஜ் பாண்டே?

மன்றம் வேறு கட்சி வேறு என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு வெடியை கொழுத்திப் போட்டுள்ளார். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கலைப்புலி தாணு, பாரதிராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகிய மூன்று பேரும் அழைக்கப் பட்டுள்ளார்கள். ரஜினி சாரின் ஒப்புதல் இல்லாமல் இவர்கள் மூவரும் அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது. ரஜினி சார் மீது தாணு சாரின் அளவுகடந்த பாசம், நம்பிக்கை பற்றி யாருக்கும் எள்ளளவும்
 

மன்றம் வேறு… கட்சி வேறு… ரசிகர்களுக்குள் குழப்பம் ஏற்படுத்துகிறாரா ரங்கராஜ் பாண்டே?ன்றம் வேறு கட்சி வேறு என்று ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு வெடியை கொழுத்திப் போட்டுள்ளார். வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில் கலைப்புலி தாணு, பாரதிராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகிய மூன்று பேரும் அழைக்கப் பட்டுள்ளார்கள்.

ரஜினி சாரின் ஒப்புதல் இல்லாமல் இவர்கள் மூவரும் அழைக்கப்பட்டிருக்க மாட்டார்கள் என்று தான் தெரிகிறது. ரஜினி சார் மீது தாணு சாரின் அளவுகடந்த பாசம், நம்பிக்கை பற்றி யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் வராது.  பாரதிராஜா வெளிப்படையாக ரஜினி சாரின் அரசியலை எதிர்க்கிறார். ஆனால் உயிர் நண்பன் என்கிறார். எந்த மேடையில் பேசினாலும் எமோஷன் தான் நான் என்று ஒப்புக் கொள்கிறார். ரஜினி சாரும் பாரதிராஜாவும் அரசியலில் எதிரெதிர் துருவம் தான் என்றாலும் நட்பில் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுப்பதில்லை.

பத்திரிக்கையாளனாகிய நான் ரஜினி சார் செய்யும் ஒவ்வொன்றையும் கவனித்து வருகிறேன். தொலைக்காட்சியில் தான் அவரை அதிகமாக பார்க்கிறேன் என்றெல்லாம் சொல்லிவிட்டு ரஜினி ரசிகர்களுக்கு அரசியல் பாடம் எடுத்துள்ளார் ரங்கராஜ் பாண்டே?. கடைசியில் அவர் சொல்லியிருப்பது ஓவ்வொரு பூத்துலேயும் ஓட்டுப் போட ஆளுங்களை கூட்டிகிட்டு வரனும். இது கூட தெரியாமலா பூத் கமிட்டிக்கு ஆள் சேர்த்தாங்க ரஜினி ரசிகர்கள்?

அட, 1996லெயே திமுக காரங்ககிட்டே களப்பணி கத்துகிட்டவங்க தானே ரஜினி ரசிகர்கள். அவர்களுக்கு வாக்குச்சாவடிக்கு ஆள் திரட்டி வருவது எப்படின்னு தெரியாதா?அதிலே பாதிப்பேரு அந்தக் கட்சிக்கு போய்ட்டாலும் ரஜினி சார் கட்சி ஆரம்பிச்சதும் வர்றதுக்கு ரெடியா இருக்காங்க தானே.  புதுசா தேர்தல் களம் காணும் இளம் ரசிகர்களுக்கு, இதுக்கெல்லாம் தேர்தல் நேரத்திலே பயிற்சி கொடுத்தாப் போதுமே.

இதெல்லாம் பரவாயில்லேங்க. மன்றம் வேறு, கட்சி வேறு என்று சொல்லியிருக்காரே, இது ரஜினி சார் சொல்லித்தான் பேசுனாரா? அல்லது சொந்த சரக்கை அவுத்து உட்டுருக்காரா? மன்ற நடவடிக்கைகள் வேறு தான், கட்சி நடவடிக்கைகள் வேறு தான். யாரும் மறுக்க மாட்டாங்க. ஆனா இவர் காட்டின உதாரணம் தான் டேஞ்சரா இருக்கு. ஆர்.எஸ்.எஸ் வேறு பாஜக வேறு. திராவிடர் கழகம் வேறு, திமுக வேறுன்னு சொல்லியிருக்காரு!

அப்படின்னா, ரஜினி மக்கள் மன்றம் இப்படியே இருக்கும். ரஜினி கட்சின்னு புதுசா வரும்னு அர்த்தத்திலே சொல்லியிருக்காரு. தப்பில்லே. அதை ரசிகர்களும் எதிர்பார்க்கத் தான் செய்யுறாங்க. ஆனா கட்சியிலேயும் உண்மையான் ரசிகர்களுக்கு இடம் கிடைக்கும். உள்ளாட்சி தேர்தலிலாவது போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்ன்னு தான் ரசிகர்கள் நினைக்கிறாங்க. அவங்க ஊர்லே மாற்றுக் கட்சிக்காரங்க யாரெல்லாம் வந்தா நல்லா இருக்கும். ஜெய்க்க முடியும்ன்னும் மூத்த ரசிகர்கள், நிர்வாகிகள் பேசுறாங்க.

ஆனா, இவர் சொல்றபடி பார்த்தா ஆர்.எஸ்.எஸ் மாதிரி ரஜினி மக்கள் மன்றத்திலே உள்ளவங்க களப்பணி மட்டும் தான் செய்யனும். அதிகார அரசியலுக்கு வரக்கூடாது என்று மறைமுகமாகச் சொல்கிறார்? இதெல்லாம் ரஜினி சார் அரசியலை காலி பண்றதுக்கான வழி. நீ காலம் பூரா வேலை செய்றதுக்கு தான் லாயக்கு, அரசியல் எல்லாம் அதிபுத்திசாலிங்களுக்கு மட்டும் தான்ன்னு இங்கிலீஸில் என்னென்னமோ சொல்லியிருக்காரு மிஸ்டர் பாண்டே.. (முதல்ல பாண்டேன்ற சாதிப்பேரத் தூக்கிடுங்க சார். வேணும்னா பாண்டியன்னு வச்சுகிடுங்களேன்?)

மிஸ்டர். பாண்டேவின் ஆர்.எஸ்.எஸ். பாஜக பாசம் உலகமறிந்தது. ஆர்.எஸ்.எஸ், திராவிடர் கழகம் எல்லாம் சித்தாந்தத்திற்காக உருவாக்கப்பட்ட சித்தாந்த அமைப்புகள். அகண்ட பாரதம் என்பது ஆர்.எஸ்.எஸின் அடிநாதம். சூத்திரன் என்று மக்களை அடிமையாக நடத்துவதை எதிர்த்து, பெண்களுக்கும் சம உரிமை கேட்டு உருவானது திராவிடர் கழகம்.

ஆனால், ரஜினி சாரின் அரசியல் கட்சியாக பூத்  வாரியாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உருவானது தான் ரஜினி மக்கள் மன்றம். இப்போ ரசிகர்கள் எல்லாம் மன்றத்திலேயே இருந்துடுங்க. அரசியல் கட்சிக்கு வேற “அதி புத்திசாலிகள்” வருவாங்க. நீங்க ஓட்டுகேட்டு மட்டும் போங்கன்னு சொன்னா, அது ரசிகர்களை சோர்வடையச் செய்து ரஜினி சாருக்கே ஆபத்தாக முடியும். இதற்காகத் தான் ரஜினி சாரிடம் நெருங்குகிறாரா மிஸ்டர் பாண்டே?.

எல்லா ரசிகர்களுக்கும் ரஜினி சாரின் அரசியல் கட்சியில் பதவி கொடுக்க முடியாதுன்னு ஓவ்வொரு ரசிகருக்கும் தெரியும். தனக்கு கிடைக்கா விட்டாலும் தலைவருக்கு விசுவாசமா இருக்கிறவங்களுக்கு கிடைச்சா போதும்ன்னு தான் பெரும்பாலான ரசிகர்கள் நம்மிடம் அடிக்கடி சொல்லிட்டு இருக்காங்க. நீங்க வந்து ஒட்டு மொத்த ரசிகர்களையே, அவர்கள் அரசியலுக்கு லாயக்கில்லே, அதுக்கெல்லாம் அதிபுத்திசாலியா இருக்கனும்ன்னு சொன்னீங்கன்னா, அவங்க எப்படி சார் பூத் பூத்தா வாக்காளரிடம் போய் கேட்டு பூத்துக்கு கூட்டிட்டு வருவாங்க?

ரஜினி சார், நீங்க அமைதியா இருப்பதை பயன்படுத்திக் கொண்டு, ஆளாளுக்கு  அவங்களோட சொந்தக் கருத்தை எடுத்து விடுறாங்களோன்னு தோணுது. ரசிகர்கள் இல்லாமல் கட்சி இல்லை. சிறுபான்மை ரசிகர்களை இழந்து கட்சி தேவையில்லேன்னு நீங்க சொல்லியிருக்கீங்க. மிஸ்டர் பாண்டே ஒட்டு மொத்த ரசிகர்களுக்கும் வேட்டு வச்சிருக்காரு.. இதை நீங்க தான் தெளிவு படுத்தனும் ரஜினி சார்!

–  ‘ரைட்’ பாண்டியன்

From around the web