சூப்பர் ஸ்டாரையும் சகலகலா வல்லவனையும் உருவாக்கிய பஞ்சு அருணாசலம் நினைவு நாள்!

பஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் அழுத்தமான ஆளுமை, நிஜ சகலகலா வித்தகர். ஆரம்ப ஆண்டுகளில் 12 வருடங்களில், கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநரும் கூட வெற்றிகரமான பல படங்களின் தயாரிப்பாளர். ரஜினிகாந்த், கமல்ஹாஸன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர்களுடன் கூட்டணி அமைத்துப் பஞ்சு அருணாசலம் எடுத்த படங்கள் இன்றும் மறக்க முடியாதவை. ரஜினிகாந்த்துக்கு ஆரம்பகாலத்தில் வரிசையாக சூப்பர் ஹிட்களை அளித்தவர் இவர்தான்; ’ப்ரியா’தான் ரஜினிக்கு முதல் சில்வர் ஜூப்ளி.
 


ஞ்சு அருணாச்சலம்… தமிழ் சினிமாவின் அழுத்தமான ஆளுமை, நிஜ சகலகலா வித்தகர்.

ஆரம்ப ஆண்டுகளில் 12 வருடங்களில், கிட்டத்தட்ட 600 படங்களுக்குக் கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்தவர். கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநரும் கூட

வெற்றிகரமான பல படங்களின் தயாரிப்பாளர்.

ரஜினிகாந்த், கமல்ஹாஸன், எஸ்.பி. முத்துராமன் ஆகியோர்களுடன் கூட்டணி அமைத்துப் பஞ்சு அருணாசலம் எடுத்த படங்கள் இன்றும் மறக்க முடியாதவை.

ரஜினிகாந்த்துக்கு ஆரம்பகாலத்தில் வரிசையாக சூப்பர் ஹிட்களை அளித்தவர் இவர்தான்; ’ப்ரியா’தான் ரஜினிக்கு முதல் சில்வர் ஜூப்ளி. அதை எடுத்தது இந்தப் பஞ்சு அருணாச்சலம்தான். ரஜினி வாழ்க்கையில் மறக்க முடியாத 6லிருந்து 60வரை படத்தின் எழுத்தாளர், தயாரிப்பாளரும் இதே பஞ்சுதான்.

கிட்டத்தட்ட ஓய்வுக்குச் சென்றுவிட்ட ஜெய்சங்கருக்கு முரட்டுக்காளை படம் மூலமாக மறுவாழ்வு அளித்தவர்;

இளையராஜா என்ற இசைக் கொடையை இந்த உலகுக்குத் தந்த பெருமை மிகு மனிதர் பஞ்சு அருணாசலமே. அவர் எடுத்த அன்னக்கிளி படம் எப்படி பிய்த்துக்கொண்டு பட்டிதொட்டியெங்கும் தமிழகத்தில் ஓடியது என்பது அக்காலத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இளையராஜாவுடன் அன்னக்கிளியில் தொடங்கிய பஞ்சு அருணாச்சலத்தின் பயணம், அவரது கடைசி மூச்சு வரைத் தொடர்ந்தது. இளையராஜாவைப் போலவே அவரது இரு மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜாவையும் இசையமைப்பாளர்களாக அறிமுகப்படுத்தியவரும் இதே பஞ்சு அருணாச்சலம்தான்.

மிக எளிமையான வரிகள், ஆனால் ஆழமான கருத்துக்களைக் கொண்ட ஏராளமான பாடல்களையும் எழுதியிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம். ‘சாரதா’ படத்தில் இவர் எழுதிய ‘மணமகளே மருமகளே வா வா’ என்ற பாடல், இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிபரப்பப்படுகிறது.

’கமர்ஷியல் படம்’ என்றால் அது எப்படி இருக்கவேண்டும் என்பதற்குப் பஞ்சு அருணாசலம் எழுதிய படங்களே மிகச்சிறந்த உதாரணங்கள்.

மிக எளிமையான கதை, அக்கதையில் ஒருசில திருப்பங்கள், அலுப்பே தட்டாத காட்சிகள், பாடல்கள், எல்லாமே சிறப்பாக முடித்து வைக்கப்படும் க்ளைமாக்ஸ் என்று அவரது படங்கள் அத்தனை தரப்பு ஆடியன்ஸையும் நிறைவுபடுத்தின.

மாஸ் ஆடியன்ஸுக்காக முரட்டுக்காளை, சகலகலா வல்லவன், எல்லாம் இன்பமயம், தம்பிக்கு எந்த ஊரு போன்ற படங்கள்; க்ளாஸ் ஆடியன்ஸுக்காக புவனா ஒரு கேள்விக்குறி, அன்னக்கிளி, நதியைத் தேடிவந்த கடல் போன்ற படங்கள்;

மாஸ்+க்ளாஸ் கலந்து உயர்ந்த உள்ளம், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் போன்ற படங்கள் என்று பஞ்சு அருணாசலம் எழுதாத திரைக்கதைகளே இல்லை.

ஒரே நேரத்தில் (1979) ரஜினியை வைத்து 6லிருந்து 60 வரை, கமல் ஹாஸனை வைத்து கல்யாணராமனையும் எடுத்து பெரும் வெற்றிப் படங்களாக்கியவர் பஞ்சு அருணாச்சலம்.

பொதுவாக, திரைப்படங்களில் எழுத்தாளர்களாக இருப்பவர்களுக்கு சரக்கு விரைவில் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தமிழில் உண்டு. உலகம் முழுக்க, மிகவும் வயதானர் இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

இருந்தாலும் தமிழில் அப்படி நடப்பதில்லை (ஓரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து).

பஞ்சு அருணாசலம் துவக்கத்தில் இருந்து இறுதிவரையிலும் வற்றாத கற்பனைத் திறனைக் கொண்டிருந்தவர். அவரிடம் யாரும் சென்று ஆலோசனை கேட்க முடியும். குறீப்பாகக் கமல்ஹாஸனுக்கு அவர் அளித்துள்ள ஆலோசனைகள் அளப்பரியவை என்று திரைவட்டாரங்கள் சொல்லும்.

எப்படிப்பட்ட படத்தையும் பார்த்துவிட்டு, அப்படத்தின் பிரச்னைகள், எப்படி எடிட் செய்யலாம், எப்படி அப்படத்தை சுவாரஸ்யமாக மாற்றலாம் என்றெல்லாம் பஞ்சு அருணாசலம் பலருக்கும் ஆலோசனைகள் வழங்குவதில் தேர்ந்தவர்.

அப்படி அவர் ஆலோசனை கூறி வெற்றிப் பெற்ற படங்களுக்கு சிறந்த உதாரணம்.. மைக்கேல் மதன காமராஜன், அபூர்வ சகோதரர்கள்.

இன்று அவரது மூன்றாவது நினைவு நாள்.

– வணக்கம் இந்தியா

From around the web