நாம் தமிழர் கட்சியை முந்திய பனங்காட்டுப் படை!

நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பனங்காட்டுப் படை கட்சி 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குனேரியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.நாராயணன் 95 ஆயிரத்து 360 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 913 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜா மனோகரன் 3 ஆயிரத்து 488 வாக்குகள்
 

நாம் தமிழர் கட்சியை முந்திய பனங்காட்டுப் படை!

நாங்குனேரி தொகுதி இடைத் தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள பனங்காட்டுப் படை கட்சி 3 வது இடத்தைப் பிடித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாங்குனேரியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வி.நாராயணன் 95 ஆயிரத்து 360 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ரூபி மனோகரன் 61 ஆயிரத்து 913 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராஜா மனோகரன் 3 ஆயிரத்து 488 வாக்குகள் பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சுபாஷ் பண்ணையார் – ராக்கெட் ராஜா இணைந்து தொடங்கிய பனங்காட்டு படை கட்சி சார்பில் ஹரி நாடார் ஹெல்மெட் சின்னத்தில் போட்டியிட்டார். ராக்கெட் ராஜாவும் ஹரி நாடாரும், தங்கள் சாதி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களாக தேர்ந்தெடுத்து பிரச்சாரம் செய்தார்கள். 4 ஆயிரத்து 242 வாக்குகள் பெற்று 3வது இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

நாம் தமிழர் கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளதால், பனங்காட்டு படை கட்சி தலைவர்களும், தொண்டர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேரம் பேசுவதற்கு அக்கட்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளது நாங்குனேரி இடைத்தேர்தல்.

 

From around the web