எரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்பு

எரிவாயு குழாய் பதிப்பதற்காக தூத்துக்குடி அருகே நெல்வயல்கள் அழிக்கப்பட்டுள்ளன. பச்சைப் பசுமையான நெல்வயல் கதிர் பருவத்திற்காக காத்திருக்கும் வேளையில் அத்துமீறி நுழைந்து அழிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கொந்தளித்துள்ளார்கள். நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை வரை ஐ.ஓ.சி நிறுவனத்தின் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் வழியாக இந்த குழாய்ப் பாதை குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு கிராமங்கள் வழியாகச் சென்று ஸ்பிக் நிறுவனத்தை அடையும் வகையில் திட்டமிட்டுள்ளார்கள். குலையன்கரிசல் கிராமத்தில் நஞ்செய்
 

எரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்புரிவாயு குழாய் பதிப்பதற்காக தூத்துக்குடி அருகே நெல்வயல்கள் அழிக்கப்பட்டுள்ளன. பச்சைப் பசுமையான நெல்வயல் கதிர் பருவத்திற்காக காத்திருக்கும் வேளையில் அத்துமீறி நுழைந்து அழிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கொந்தளித்துள்ளார்கள்.

நாகப்பட்டினத்திலிருந்து தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலை வரை ஐ.ஓ.சி நிறுவனத்தின் சார்பில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்தின் வழியாக இந்த குழாய்ப் பாதை குலையன்கரிசல், பொட்டல்காடு, முள்ளக்காடு கிராமங்கள் வழியாகச் சென்று ஸ்பிக் நிறுவனத்தை அடையும் வகையில் திட்டமிட்டுள்ளார்கள்.

குலையன்கரிசல் கிராமத்தில் நஞ்செய் நிலங்கள் வழியாகச் செல்வதால், மண்வளம் பாதிக்கும், நெல் வாழை பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் அரசுக்கு சொந்தமான இடம் வழியாக மாற்றுப் பாதையில் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். 

எரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்பு

இது தொடர்பாக கிராம சபைக் கூட்டத்திலும் பல தடவைகள் தீர்மானம் இயற்றியுள்ளனர். மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். சமாதானக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சமீபத்தில் சார் ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. 

விவசாயிகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு வாங்கியிருக்கிறார்கள். உத்தவை மீறி, ஐஓசி நிறுவனத்திற்கு அனுமதி அளிக்காத விவசாயிகளின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து குழாய்களை பதிக்க முயன்றுள்ளனர். சுமார் 2 ஏக்கர் நெல் பயிரை நாசப்படுத்தியுள்ள நிலையில் விவசாயிகள் விரைந்து வந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.

எரிவாயு குழாய் பதிக்க நெல்வயல்கள் அழிப்பு…. தூத்துக்குடியில் விவசாயிகள் கொந்தளிப்பு

குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயம் மட்டுமே வாழ்வாதராமாக இருக்கிறது. வாழை பயிரிடப்படாத வயல்களில் ஆண்டுக்கு ஒரு போகம் நெல் விளைகிறது. இது தாமிரபரணி ஆற்றுப் பாசனப் பகுதியாகும். ஆங்கிலேயர்கள் காலம் முதலாகவே குளங்கள், தடுப்பணை கட்டப்பட்டு விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது நெல் விவசாயத்தில் நெற்பயிர்கள் கதிர் அடையும் பருவத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தின் சார்பில் எந்திரங்களைக் கொண்டு நெல் வயல்களை அழித்து குழாய் பதிக்க முயன்றுள்ளனர். சம்பவம் அறிந்து விவசாயிகள் திரண்டு சென்று மேலும் அழிக்க விடாமல் தடுத்துள்ளனர். நெல்வயல்களை அத்துமீறி அழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

நெல்வயல்களை அழித்துள்ளதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே, தாமிரபரணி பாசனப் பகுதியில் நெல்வயல்கள் அழிக்கப்பட்டுள்ளது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். 

அத்துமீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? விவசாயிகள் நலன் காக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.

https://www.A1TamilNews.com

 

From around the web