மழையால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம்!

கோபி: அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபி செட்டிப்பாளையத்தில் மழையால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. வாணிபக் கழகம் அந்த மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருந்த நிலையில், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன. சுமார் 10 ஆயிரம் நெல்
 

கோபி: அமைச்சர் செங்கோட்டையனின் தொகுதியான கோபி செட்டிப்பாளையத்தில்  மழையால் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளன. கோபி அருகே  கூகலூரில் உள்ள அரசு வாணிபக் கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளைக் கொண்டு வந்திருந்தார்கள்.

திறந்தவெளியில் நெல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன. வாணிபக் கழகம் அந்த மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் இருந்த நிலையில், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் நெல் மூட்டைகள் நனைந்து விட்டன.  சுமார் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விட்டதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து விட்டதாலும்,அரசு கொள்முதல் நிலையத்தில் தாமதம் ஏற்பட்டதாலேயே சேதம் அடைந்துள்ளதால்,  அவற்றை அரசு நிபந்தனையின்றி கொள்முதல் செய்து கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

10 ஆயிரம் நெல் மூட்டைகள் சேதம் அடைந்துள்ளது கோபி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. திடீர் மழையால் ஏற்பட்ட சேதம் குறித்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொகுதி விவசாயிகளின் கோரிக்கையை அமைச்சர் செங்கோட்டையன் ஏற்று தீர்வு காண்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

 

From around the web