தித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்!

தேவையானப் பொருட்கள் பாசிப்பருப்பு-100கி கடலைப் பருப்பு-1 டீஸ்பூன் நெய்-50மிலி தேங்காய் பால்-1கப் வெல்லம்-75கி ஏலக்காய்-5 முந்திரி-5 பாதாம்-5 உலர் திராட்சை-5 செய்முறை வாணலியில் நெய்யை உருக்கிக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை சேர்த்து வாசம் வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மலர வேகவிடவும். வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதனுடன் வெந்த பாசிப்பருப்பு கலவையையும், அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்த்து இந்த கலவையை நன்கு கொதிக்க விடவும். ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த
 

தித்திக்கும் சுவை தரும் பாசிப்பருப்பு பாயாசம்!தேவையானப் பொருட்கள்
பாசிப்பருப்பு-100கி
கடலைப் பருப்பு-1 டீஸ்பூன்
நெய்-50மிலி
தேங்காய் பால்-1கப்
வெல்லம்-75கி
ஏலக்காய்-5
முந்திரி-5
பாதாம்-5
உலர் திராட்சை-5

செய்முறை

வாணலியில்  நெய்யை  உருக்கிக் கொள்ளவும். இதில் பாசிப்பருப்பை  சேர்த்து வாசம் வரும் வரை பொன்னிறமாக வறுக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்த்து  மலர வேகவிடவும்.
வெல்லத்தை  தண்ணீரில் கரைத்து  வடிகட்டவும். இதனுடன்   வெந்த பாசிப்பருப்பு கலவையையும்,  அரைத்த தேங்காய்ப் பாலையும் சேர்த்து இந்த கலவையை நன்கு கொதிக்க விடவும்.

ஏலக்காய் பொடி, நெய்யில் வறுத்த பாதாம், முந்திரி, உலர் திராட்சை சேர்க்கவும். மிகக் குறைந்த நேரத்திலேயே பாரம்பரிய சுவையில்  பாசிப்பருப்பு பாயாசம் தயார். திடீர் விருந்தாளிகள் வீட்டிற்கு வரும் போது உடனடியாக சுவையாக செய்து குடிக்கலாம். ஃப்ரிட்ஜில் வைத்து ஜில்லெனவும் குடித்துக் கொள்ளலாம்.

A1TamilNews.com

From around the web