அரசின் அறியாமையா?தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா? – ப.சிதம்பரம் அதிரடி கேள்விகள்!

கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், இதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீட்பு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டர் மூலம் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது, “மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ரூ 1.70,000 கோடி அல்ல. இத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கும பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ 1.00,000 கோடி தான். மத்திய அரசின் திட்டத்தில் கீழ்க்கண்ட பிரிவு மக்களுக்கு
 

அரசின் அறியாமையா?தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா? – ப.சிதம்பரம் அதிரடி கேள்விகள்!கொரோனோ வைரஸ் பரவலை தடுப்பதற்காகவும், இதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மீட்பு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ட்விட்டர் மூலம் ப.சிதம்பரம் கூறியுள்ளதாவது,

“மத்திய அரசு அறிவித்துள்ள உதவித் திட்டத்தின் மதிப்பு ரூ 1.70,000 கோடி அல்ல. இத்திட்டத்தில் மக்களுக்கு வழங்கப்படவிருக்கும பணம் மற்றும் பொருள்களின் மதிப்பு ரூ 1.00,000 கோடி தான்.

மத்திய அரசின் திட்டத்தில் கீழ்க்கண்ட பிரிவு மக்களுக்கு எந்தப் பயனும் கிடையாது.குத்தகை விவசாயிகள், விவசாயத் தொழிலாளிகள், வேலை உறுதி திட்டத்தில் வேலை இல்லாதவர்கள், ஜன் தன் திட்டத்தில் கணக்கு உள்ள ஆண்கள் , லே ஆப் செய்யப்பட்ட தொழிலாளர்கள், இன்னும் பலர்.

ரூ 5 லட்சம் கோடி தேவைப்படும் சூழ்நிலையில் ரூ 1 லட்சம் கோடி மட்டும் ஒதுக்கிய அரசைப் பற்றி என்ன சொல்வது? தொலைக்காட்சியில் பார்க்கும் பசியில் வாடும் குழந்தைகளையும் தம் கிராமங்களை நோக்கி நடந்தே போகும் வேலையில்லாத தொழிலாளர்களையும் அரசு பார்க்கவில்லையா?

இதற்குக் காரணம் அரசின் அறியாமையா? அரசுக்குச் சொல்லப்படும் தவறான யோசனைகளா? நிர்வாகத் திறமையின்மையா?,”

என்று அடுத்தடுத்த ட்வீட்கள் மூலம் மத்திய அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார் ப.சிதம்பரம்.

 

From around the web