“நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் தொடக்கம்! அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதைத் தடுப்பதற்காக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். இதன் படி சென்னையில் கோவிட் பரவல் அதிகம் உள்ள 33 வார்டுகளில் கண்காணிப்புக்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் 33 வார்டுகளில்
 

“நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம்” இன்று முதல் தொடக்கம்! அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இதைத் தடுப்பதற்காக நம்ம சென்னை கோவிட் விரட்டும் திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இதன் படி சென்னையில் கோவிட் பரவல் அதிகம் உள்ள 33 வார்டுகளில் கண்காணிப்புக்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகம் காணப்படும் 33 வார்டுகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் காய்ச்சல்,சளி, இருமல், தும்மல் அறிகுறி இருப்பவர்களை உடனடியாக முகாம்கள் தங்க வைத்து சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நடமாடும் ஆய்வகங்கள் அறிகுறி இருப்பவர்களின் எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை மாதிரிகளும் எடுக்கப்பட உள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வசித்து அனைத்து மக்களுக்கும் அதாவது அறிகுறி இல்லாத மக்களுக்கும் கூட பரிசோதனைகள் நடத்தப்படும்.

இதன் மூலம் ஆரம்பநிலையிலேயே தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து விரைவில் கொரோனா இல்லாத சென்னையாக மாற்றப்படும் எனவும் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web