அடுப்பங்கரையில் இனி வேலை நேரம் குறையுமாம்! அமெரிக்காவிலும் பரபரப்பாகும் ‘ஓபாஸ் சமையல்’

சான் ஃப்ரான்சிஸ்கோ: ஐந்தே நிமிடத்தில் எல்லா வகையான உணவுகளையும் சமைக்கும் “ஓபாஸ் சமையல்” முறை அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் மில்பிடஸ் நகரில் உணவகம் ஒன்றில் நடைபெற்ற ஓபாஸ் சமையல் பயிற்சி முகாம் ஹவுஸ்புல் ஆகி விட்டது. தனித்தனி டேபிள்களில், குழுக்களாக பிரிந்து பல்வேறு உணவுகளை சமைத்துள்ளார்கள். அன்னாசிப்பழ கேசரி , குருமா, ஸ்ட்யூ , சென்னா மசாலா , பாஸ்தா, போஹா என நீண்ட உணவுப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் ஐந்தே
 

அடுப்பங்கரையில் இனி வேலை நேரம் குறையுமாம்! அமெரிக்காவிலும் பரபரப்பாகும்  ‘ஓபாஸ் சமையல்’

சான் ஃப்ரான்சிஸ்கோ: ஐந்தே நிமிடத்தில் எல்லா வகையான உணவுகளையும் சமைக்கும் “ஓபாஸ் சமையல்” முறை அமெரிக்காவிலும் பரவத் தொடங்கியுள்ளது. சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியில் மில்பிடஸ் நகரில் உணவகம் ஒன்றில் நடைபெற்ற ஓபாஸ் சமையல் பயிற்சி முகாம் ஹவுஸ்புல் ஆகி விட்டது. 
 
தனித்தனி டேபிள்களில், குழுக்களாக பிரிந்து பல்வேறு உணவுகளை சமைத்துள்ளார்கள். அன்னாசிப்பழ கேசரி , குருமா, ஸ்ட்யூ , சென்னா மசாலா , பாஸ்தா, போஹா என நீண்ட உணவுப் பட்டியல் இடம் பெற்றுள்ளது. ஒவ்வொன்றும் ஐந்தே நிமிடத்தில் தயாராகி வழக்கமான சுவையுடன் இருந்துள்ளது.  சிறுவர்களும் தங்கள் பங்குக்கு சமைத்து அசத்தியுள்ளார்கள். சமைக்கப்பட்ட உணவு அனைவருக்கும் அங்கேயே பரிமாறப்பட்டது.
அடுப்பங்கரையில் இனி வேலை நேரம் குறையுமாம்! அமெரிக்காவிலும் பரபரப்பாகும்  ‘ஓபாஸ் சமையல்’
”பாரம்பரிய சமையல் முதல் பன்னாட்டு சமையல் வரை எதையும்  ஆரோக்கியமான முறையில் எளிதில், விரைவில் சுவையாக சமைக்கும் ஒரு அற்புத சமையல் முறை. இதற்கு விலையுயர்ந்த கருவியோ புதுவிதமான பாத்திரமோ எதுவும் தேவை இல்லை. ஒரு இரண்டு லிட்டர் குக்கர் இருந்தாலே போதுமானது. குறைந்த அளவு எண்ணையும் அதிக ஊட்டச்சத்தும் நிறைந்ததால் ஓபாஸ்  ஒரு அறிவியல் பூர்வமான  ஆரோக்கியமான  சமையல் முறை ஆகும்” என்று சொல்கிறார்கள் பயிற்சி முகாமை நடத்திய வைஷாலி, ருக்மணி, மனோஜ் மற்றும் ரவி.  
 
இவர்கள் நால்வரும் சென்னையை சேர்ந்த ராமகிருஷ்ணனிடம் ஓபாஸ் சமையல் பற்றி நேரிடையாக சுமார் இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவர்கள். ஐந்து வயது குழந்தை முதல் எண்பது வயது முதியவர் வரை யார் சமைத்தாலும்  எத்தனை முறை சமைத்தாலும் எப்பொழுதும் ஒரே சுவை தரம்  கிடைத்திடும் என்கிறார்கள். 
 
ராமகிருஷ்ணன் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கண்டுபிடித்த  சமையல் ஆராய்ச்சியின் அறிமுகம் தான் One Pot One Shot (OPOS) என்ற ஓபாஸ் சமையல் முறை. இந்த சமையல் முறையை அறிமுகப் படுத்திய போது பாரம்பரிய, ஊட்டச்சத்து மிக்க நமது சமையல் முறையை கெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்ததாம். உலகம் முழுவதும் பெண்களும் ஆண்களும் அடங்கிய ஒரு குழுவாக செயல்பட்டு, ஒவ்வொரு உணவாக சோதனை முறையில் சமைத்து, தற்போது பெரும்பாலான இந்திய உணவுகள் ஓபாஸ் முறையில் சமையல் செய்ய முடியும் என்கிறார்கள். 
 
இதில் அசைவ உணவும் அடங்கும். மேலும் பல்வேறு வெளிநாட்டு உணவுகளையும் ஓபாஸ் முறையில் சமைக்க முடியுமாம். சைவம் அசைவம் என இரு வகை உணவுகளையும் ஐந்தே நிமிடத்தில், திரும்பத் திரும்ப அதே சுவையில் சமைக்க முடியும் என்று அடித்துக் கூறுகிறார்கள் வைஷாலி, ருக்மணி, மனோஜ் மற்றும் ரவி. 
 
ஓபாஸ் தொடர்பான மேலதிக தகவல்கள் வீடியோக்கள்  https://oposchefinaday.com/ என்ற இணையத் தளத்தில் காணலாம்.  அமெரிக்கா முழுவதும் ஓபாஸ் பயிற்சி முகாம்கள் நடத்துமாறு கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கிறதாம். விரைவில் ஓவ்வொரு நகரமாக பயிற்சி முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும் என்கிறார்கள். 
 
அப்போ, இனி அடுப்பறையில் செலவிடும் நேரம் கணிசமாக குறைந்து விடும் என்று சொல்லுங்கள்!
 
– வணக்கம் இந்தியா

From around the web