திருப்பதியில் இனி ஒரே ஒரு லட்டு இலவசம்! அதற்கு மேல் வாங்கினால் ரூ.50!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன. இரு மலைப்பாதைகளில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 20 ரூபாய்க்கு 2 லட்டுகளும், கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு 50 ரூபாய்க்கு
 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் 1 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்கிறார்கள். 300 ரூபாய் டிக்கெட் தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்படுகின்றன.

இரு மலைப்பாதைகளில் நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், சலுகை விலையில் 20 ரூபாய்க்கு 2 லட்டுகளும், கூடுதல் லட்டுகள் தேவைப்படுவோருக்கு 50 ரூபாய்க்கு 2 லட்டுகளும் வழங்கப்பட்டு வந்தன. இதனால் கோவில் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 241 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனால் இனி அனைத்து தரிசன பக்தர்களுக்கும் தலா ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக லட்டு தேவைப்படுவோர் 50 ரூபாய் கொடுத்து வாங்கி செல்ல வேண்டுமென தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அண்மையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படும் என அறிவித்துவிட்டு திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு லட்டை குறைத்துள்ளது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web