ஆன்லைன் ஒளிபரப்புக்களே வெற்றியைத் தரும் ! கோலிவுட் வட்டாரக் கருத்துக் கணிப்பு!

கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்ல சினிமாத்துறை பிரபலங்களும், அரசியல்வாதிகளும், பொது நல விரும்பிகள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் வரை பெரும்பாலும் இதே நிலை தான் நீடிக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் பொதுவெளியில் நடமாடுவர். இந்தச் சூழ்நிலையில் திரைப்படங்களின் 100 நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் வெறும் கனவாகவே அமையும். இனி,
 

ஆன்லைன்  ஒளிபரப்புக்களே வெற்றியைத் தரும் ! கோலிவுட்  வட்டாரக் கருத்துக் கணிப்பு!கொரோனா அச்சத்தால் உலகம் முழுவதும் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்ல சினிமாத்துறை பிரபலங்களும், அரசியல்வாதிகளும், பொது நல விரும்பிகள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்துள்ளனர்.

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் விநியோகிக்கப்படும் வரை பெரும்பாலும் இதே நிலை தான் நீடிக்கும். அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டுமே மக்கள் பொதுவெளியில் நடமாடுவர்.

இந்தச் சூழ்நிலையில் திரைப்படங்களின் 100 நாள் கொண்டாட்டங்கள் எல்லாம் வெறும் கனவாகவே அமையும். இனி, ‘ஆன்லைன்’ கொண்டாட்டங்கள் மட்டுமே அதிகரிக்கும். தனுசின் பட்டாஸ் மற்றும் பாவெல் நவகீதனின் வி1 படங்கள் ஆகியவை ஆன்லைனில் சக்கை போடு போட்டன.

உலக அளவில் நெட்ஃபிளிக்ஸ்,அமேசான் பிரைம் போன்ற தளங்களில் சென்ற மாதங்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை 5 கோடியைக் காட்டிலும் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போதைய இந்த நிலை மாறும் வரை ஆன்லைனில் கொண்டாட்டங்கள் மட்டுமே அதிகம் காணப்படும் என கோலிவுட் வட்டாரங்களின் கருத்துக் கணிப்புக்கள் தெரிவித்துள்ளன.

A1TamilNews.com

From around the web