ஹோட்டல்களில் வெங்காய தோசைக்கு தடை!

வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வெங்காய தோசை பரிமாறப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விளைச்சல் குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை தினசரி அதிகரித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகங்களில், வெங்காய தோசை பரிமாறப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வெங்காய விலை உயர்வுக்கு ஏற்ப, வெங்காய தோசையின்
 

ஹோட்டல்களில் வெங்காய தோசைக்கு தடை!வெங்காயம் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்களுக்கு வெங்காய தோசை பரிமாறப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

விளைச்சல் குறைந்ததால், நாடு முழுவதும் வெங்காயத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், வெங்காயத்தின் விலை தினசரி அதிகரித்து வருகிறது. விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள உணவகங்களில், வெங்காய தோசை பரிமாறப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வெங்காய விலை உயர்வுக்கு ஏற்ப, வெங்காய தோசையின் விலையை உயர்த்தினால், நடுத்தர வர்க்க வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இம்முடிவுக்கு வந்ததாக பெங்களூரு ஹோட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

From around the web