ஒரே தேசம், ஒரே சந்தை! பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு!!

கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முதலீடுகளின் மூலமே வேலை வாய்ப்புக்கள் உருவாகும். வேலை வாய்ப்பின் மூலமே உற்பத்தி பெருகி பொருளாதாரம் உயரும். மேலும் ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் மத்திய
 

ஒரே தேசம், ஒரே சந்தை!  பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு!!கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. சுயசார்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் முதலீடுகளை அதிகரிக்க புதிய நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். முதலீடுகளின் மூலமே வேலை வாய்ப்புக்கள் உருவாகும்.

வேலை வாய்ப்பின் மூலமே உற்பத்தி பெருகி பொருளாதாரம் உயரும்.
மேலும் ஒரே தேசம், ஒரே சந்தை திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அதிக அளவில் உற்பத்தியைப் பெருக்க வழிகாட்டுதல்கள் குழுக்களையும் உருவாக்கி வருகிறது.

விவசாயிகளே விளைப்பொருட்களுக்கு விலையை நிர்ணயித்துக் கொள்ளலாம். விவசாய விளை பொருட்களை இந்தியாவிற்குள் எந்த மாநிலத்திலும் விற்க தடையின்றி அனுமதி அளிக்கப்படுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்திற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாகவும் செயல்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

A1TamilNews.com

From around the web