அதிர்ச்சி!கொரோனாவை அடுத்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ் !

சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தோன்றப்பட்டதாக கூறப்படும் கொரோனா உலகம் முழுவதும் சுமார் 5லட்சம் பேரை இதுவரை காவு வாங்கியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டுகிறது. இந்த வைரசை எதிர்க்கும் மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் , சீனாவில் மேலும் ஒரு வைரஸ் பன்றிகளில் இருந்து பரவுவது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவை போலவே இந்த வைரசும் சுவாச மண்டலத்தை தாக்குவதாகவும், எந்த வைரஸ் தடுப்பூசிகளும் இந்த வைரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் விஞ்ஞானிகள்
 

அதிர்ச்சி!கொரோனாவை அடுத்து சீனாவில் மேலும் ஒரு வைரஸ் !சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தோன்றப்பட்டதாக கூறப்படும் கொரோனா உலகம் முழுவதும் சுமார் 5லட்சம் பேரை இதுவரை காவு வாங்கியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டுகிறது. இந்த வைரசை எதிர்க்கும் மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை.

இந்நிலையில் , சீனாவில் மேலும் ஒரு வைரஸ் பன்றிகளில் இருந்து பரவுவது தற்போது கண்டறியப்பட்டு உள்ளது. கொரோனாவை போலவே இந்த வைரசும் சுவாச மண்டலத்தை தாக்குவதாகவும், எந்த வைரஸ் தடுப்பூசிகளும் இந்த வைரசுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் அமெரிக்காவின் ஆய்வு பத்திரிகையான பி.என்.ஏ.எஸ்.சில் கட்டுரையாக வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனாவின் தாக்கத்திலிருந்தே இன்னும் மனித குலம் விடுபடாத நிலையில், மீண்டும் ஒரு வைரஸ் என்பது மருத்துவ நிபுணர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

A1TamilNews.com

From around the web