ஆரோக்கியமாக வாழ ஒரு சொட்டு எண்ணெய் போதும்! அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்!

தாயின் கருவறையில் வளர ஆரம்பிக்கும் போதே குழந்தை தனக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தொப்புளில் இருந்தே பெறுகிறது. இதனால் உடலின் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது. உடலின் அனைத்து நரம்புகளையும் கட்டுப்படுத்தும் சக்தி தொப்புளுக்கு உள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பராமரிக்கும் விதம் குறித்தும் இதில் தினமும் சில துளிகள் எண்ணெய் விடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்தும் இப்பதிவில் காணலாம். வாயுக் கோளாறுகள் இருப்பவர்கள் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து
 

ஆரோக்கியமாக வாழ ஒரு சொட்டு எண்ணெய் போதும்! அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்!தாயின் கருவறையில் வளர ஆரம்பிக்கும் போதே குழந்தை தனக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் தொப்புளில் இருந்தே பெறுகிறது. இதனால் உடலின் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது.

உடலின் அனைத்து நரம்புகளையும் கட்டுப்படுத்தும் சக்தி தொப்புளுக்கு உள்ளது என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனைப் பராமரிக்கும் விதம் குறித்தும் இதில் தினமும் சில துளிகள் எண்ணெய் விடுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது குறித்தும் இப்பதிவில் காணலாம்.

வாயுக் கோளாறுகள் இருப்பவர்கள் சிறிது பெருங்காயத்தை நீரில் கரைத்து தொப்புளில் தடவினால் உடனடியாக சரியாகிவிடும். கம்ப்யூட்டர் , மொபைல் தொடர்ந்து பார்ப்பதால் உண்டாகும் கண் வறட்சியைப் போக்க தொப்புளில் நீங்கள் தினமும் எண்ணெய் விட்டால் கண் பார்வை தெளிவடையும்.

உடல் சூட்டினால் உண்டாகும் பித்த வெடிப்பை குணப்படுத்தவும், சருமத்தை பளபளப்பாக்கவும் தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விடுவது நல்லது.

முழங்கால் மற்றும் மூட்டு வலிகள் குணமாகிறது. கால் குடைச்சல் இருப்பவர்கள் இரண்டு சொட்டு விளக்கெண்ணெய் விடலாம். வேப்பெண்ணெயை தொப்புளில் வைப்பதால் சரும வியாதிகளும், தொற்றுக்களும் குறைகின்றன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. நச்சுக்கள் அழிகிறது.

தொப்புளின் மேல் ஒரு துளி ஆலிவ் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் வலி பறந்து போகும் இவை அனைத்தும் ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இவற்றை பின்பற்றி ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுப்போம்.

A1TamilNews.com

From around the web