கொரோனா அச்சுறுத்தல் – கிரிக்கெட் போட்டிகள் ரத்து

கொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. முதல்போட்டி 12 ஆம் தேதி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற இருந்தது. ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் லக்னோவுக்கு
 

கொரோனா அச்சுறுத்தல் – கிரிக்கெட் போட்டிகள் ரத்துகொரோனா பாதிப்பு காரணமாக தென் ஆப்பிரிக்காவுடனான அடுத்த இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருந்தது. முதல்போட்டி 12 ஆம் தேதி இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடைபெற இருந்தது.

ஆனால் மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது. எனவே அடுத்த இரண்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் லக்னோவுக்கு சென்றடைந்தனர்.

ஆனால் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. மேலும் ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 15ஆம் தேதி லக்னோவில் நடைபெற இருந்த இரண்டாவது போட்டியும், வரும் 18ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த மூன்றாவது போட்டியும் ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்டுள்ள போட்டிகள் பின்னர் நடத்தப்படும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

http://www.A1TamilNews.com

From around the web