காஷ்மீர் நிலவரம்! சிறையிலிருந்து வெளி வந்த உமர் அப்துல்லாவின் திட்டம் என்ன?

மத்திய அரசின் நடவடிக்கையால் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆனது. மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்துவரும் தலித்துகள் கூர்க்காஸ், மேற்குபாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. புதிய வாக்காளர்கள் சேர்ந்து விட்டனர். சிறப்பு அந்தஸ்து ரத்தை காங்கிரசும் ஆதரித்தது. அப்துல்லா முப்தி குடும்பங்கள் மட்டுமே அதிகாரம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது. தேசிய நீரோட்டத்தில் இணைய அம்மாநில இளைஞர்கள் தயாராகி விட்டனர். மாநில
 
 
காஷ்மீர் நிலவரம்! சிறையிலிருந்து வெளி வந்த உமர் அப்துல்லாவின் திட்டம் என்ன?மத்திய அரசின் நடவடிக்கையால் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து ஆனது. மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது.  15  ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்துவரும் தலித்துகள் கூர்க்காஸ், மேற்குபாகிஸ்தான் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது.
 
புதிய வாக்காளர்கள் சேர்ந்து விட்டனர். சிறப்பு அந்தஸ்து ரத்தை காங்கிரசும் ஆதரித்தது. அப்துல்லா முப்தி குடும்பங்கள் மட்டுமே அதிகாரம் செலுத்திய காலம் மலையேறிவிட்டது.  தேசிய நீரோட்டத்தில் இணைய அம்மாநில இளைஞர்கள்  தயாராகி விட்டனர். மாநில அந்தஸ்தில் இருந்து யூனியன் பிரதேசமாக அந்தஸ்து குறைக்கப்பட்டதை முன்னாள் முதல்வர்களுக்கு ரசிக்கவில்லை. 
 
ஷேக் அப்துல்லா,பாரூக் அப்துல்லா உமர் அப்துல்லா  என பரம்பரையாக  மாநில முதல்வர் பதவியில் இருந்தனர். முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டிருந்த பாரூக், உமர் அப்துல்லாக்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மீண்டும் மாநில அந்தஸ்து பெறும்வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன், அதுவரை கட்சிக்கும் மக்களுக்கும் உழைத்துக்கொண்டு இருப்பேன் என  உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 
 
இயல்புநிலை திரும்பிய பிறகு ஜம்முகாஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க படும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.  கொரோனா, சீன ஊடுருவல் அபாயம் காரணமாக மாநில அந்தஸ்து  கிடைப்பது தாமதமாகலாம்.
 
நிலவும் புதிய அரசியல் சூழ்நிலையில் உமர் அப்துல்லா தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றே தோன்றுகிறது.  வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அவரது அமைச்சரவையில்  வெளிநாட்டு துறை அமைச்சராக இருந்தார் உமர் அப்துல்லா என்பதும் குறிப்பிடத் தக்கது. உமர் அப்துல்லாவின் தங்கையைத் தான் ராஜஸ்தான் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் திருமணம் செய்துள்ளார்.
 
மெஹபூபா முப்தி கட்சி உடைந்து விட்டது. சட்டமன்றத் தேர்தல் வரும் போது ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் தேசிய கட்சிகளான  காங்கிரசும் பா,ஜ. வும் தான் நேரடியாக களம் இறங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
 
– வி.எச்.கே.ஹரிஹரன்

From around the web