இந்நாள் அமெரிக்காவின் பொன்னாள்! கமலா ஹாரிஸ்-க்கு முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்து

ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார். “நீண்ட நாட்களாக செனட்டர் கமலா ஹாரிஸைத் தெரியும். துணை அதிபர் பதவிக்கு தேவையானதற்கும் அதிகமாகவே தன்னை தயார்ப்படுத்தியுள்ளார். அமெரிக்க அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், சாமானியர்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். இது நமது நாட்டின் நல்ல நாள். வெற்றி பெறுவோம்,” என்று ட்வீட் செய்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா. I’ve known Senator @KamalaHarris for
 

இந்நாள் அமெரிக்காவின் பொன்னாள்! கமலா ஹாரிஸ்-க்கு முன்னாள் அதிபர் ஒபாமா வாழ்த்துஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“நீண்ட நாட்களாக செனட்டர் கமலா ஹாரிஸைத் தெரியும். துணை அதிபர் பதவிக்கு தேவையானதற்கும் அதிகமாகவே தன்னை தயார்ப்படுத்தியுள்ளார். அமெரிக்க அரசியல் சாசனத்தை பாதுகாக்கவும், சாமானியர்களுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.  இது நமது நாட்டின் நல்ல நாள். வெற்றி பெறுவோம்,” என்று ட்வீட் செய்துள்ளார் முன்னாள் அதிபர் ஒபாமா.

ட்வீட்டுன் ஒரு குறிப்பையும் இணைத்துள்ள ஒபாமா, “துணை அதிபரை தேர்ந்தெடுப்பது தான் அதிபரின் முதல் முக்கியமான முடிவு. ஓவல் அலுவலகத்தில் கடினமான பிரச்சனைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, எடுக்கப்படும் முடிவு நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களுடன் சரியான முடிவை எடுக்ககூடிய சுயநலமில்லாதா ஒருவர் தேவை.

ஜோ பைடன் தீர்க்கமான முடிவை எடுத்துள்ளார். அமெரிக்காவின் அடுத்த துணை அதிபராக கமலா ஹாரிஸை தேர்ந்தெடுத்ததன் மூலம்,  வலிமையான ஒருவரை அடையாளம் காட்டியுள்ளார். இத்தகைய குணநலன்கள் ஒரு அதிபருக்கு கட்டாயத் தேவையாகும். நீங்கள் யாராக இருந்தாலும் அமெரிக்க  அடிப்படை  நெறிகளில் அனைவருக்கும் இடம் உண்டு என்பதையும் கமலா ஹாரிஸின் தேர்வு சுட்டிக் காட்டுகிறது.

நானும் மிஷல் ஒபாமாவும் கமலா ஹாரிஸ் தேர்வில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றும் கூறியுள்ளார் ஒபாமா.

முன்னாள் அதிபர் ஒபாமாவுடன் துணை அதிபராக பணியாற்றிய ஜோ பைடன், அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று கருத்துக்கணிப்புகள் வந்து கொண்டிருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப்-ஐ விட பைடன் சிறப்பாக செயல்பட்டிருப்பார் என்பது தான் அவருடைய ஆதரவுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

நவம்பர் 3ம் தேதி அமெரிக்காவில் தமிழ் வம்சாவளி கமலா ஹாரிஸ் துணை அதிபராக வெற்றிபெறுவார் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

A1TamilNews.com

 

From around the web