முருகவழிபாடு செய்பவர்கள் சங்கியரல்லர்! கந்தவழிபாடும் கறுப்பர் கூட்டமும்!!

முருகவழிபாடு செய்பவர்கள் சங்கியரல்லர்!! முருகனைத்தம் தலைவனாகக் கருதி அவனுக்குத் தேவைப்படும் பொருள்களை காவடிகளில் கட்டிச்சுமந்து சென்று கொடுத்த மரபை இன்றும் வழிவழியாகச் செய்பவர்களும் கூட. கறுப்பர் கூட்டத்தில் எவருக்கும் இத்தகைய மரபு இருப்பதும், இவர்களில் நிறையப்பேர் பெரியாரின் கொள்கைகளை அறிந்தவர்களும்தாம் என்று தெரிந்திருக்கவில்லை போலும். முருகவேள் வழிபாடு வைதீக வழிபாடன்று, இது ஊர்ப்புறங்களில் இன்றுவரைக்கும் மயார் பூசையென்றும், பழங்காலத்தில் வேலாடுதல் என்றும் வழங்கப்படுவது. அன்றைய சேரநாடாகிய கேரளாவிலிருந்து “மீனும், கோழியும்” கறிசெய்து காவடிகளில் கட்டி எடுத்துவந்து பழனி முருகனுக்குப்
 

முருகவழிபாடு செய்பவர்கள் சங்கியரல்லர்! கந்தவழிபாடும் கறுப்பர் கூட்டமும்!!முருகவழிபாடு செய்பவர்கள் சங்கியரல்லர்!! முருகனைத்தம் தலைவனாகக் கருதி அவனுக்குத் தேவைப்படும் பொருள்களை காவடிகளில் கட்டிச்சுமந்து சென்று கொடுத்த மரபை இன்றும் வழிவழியாகச் செய்பவர்களும் கூட. கறுப்பர் கூட்டத்தில் எவருக்கும் இத்தகைய மரபு இருப்பதும், இவர்களில் நிறையப்பேர் பெரியாரின் கொள்கைகளை அறிந்தவர்களும்தாம் என்று தெரிந்திருக்கவில்லை போலும்.

முருகவேள் வழிபாடு வைதீக வழிபாடன்று, இது ஊர்ப்புறங்களில் இன்றுவரைக்கும் மயார் பூசையென்றும், பழங்காலத்தில் வேலாடுதல் என்றும் வழங்கப்படுவது. அன்றைய சேரநாடாகிய கேரளாவிலிருந்து “மீனும், கோழியும்” கறிசெய்து காவடிகளில் கட்டி எடுத்துவந்து பழனி முருகனுக்குப் படைக்கும் வழக்கம் இருந்தது.

திருமலை நாயக்கர் காலத்தில் ஏற்கெனவே பூசை செய்துகொண்டிருந்தவர்களை நீக்கிவிட்டு கொடுமுடியிலிருந்து பார்ப்பனர்களை அழைத்துவந்த பின்னர்தான் மச்சக்காவடி எனப்படும் மீன்கறி காவடி நின்றுபோனது. சேவற்கறிக்கு பதிலாக சேவற்கொடியும், உயிருடன் சேவலை நேர்ந்துவிடுவதுமாகவும் மாறியது.

வைதீகம் இதை மறைத்தாலும் ஆனாலும், கொங்குநாட்டுத் தாலாட்டுப்பாடல்களின் மூலம் இன்றும் உணர்ந்துகொள்ள முடியும். கந்தசஷ்டி கவசத்தில் வரும் ஆண்குறி-பெண்குறி என்னும் சொல்லையே பெரும்பாலும் இழிவு செய்ய முயல்கிறார்கள்.

அப்படியானால், அல்குல் (பெண்குறி) என்றும், என் காதல் ஏக்கத்தைப் புரிந்துகொள்ளாத இந்த ஊரையே முட்டுவேன்கொல்!! தாக்குவேன்கொல்!! (குறுந்தொகை-28) என்றெழுதிய சங்ககால ஔவையாருள்ளிட்ட பெண்பாற்புலவர்கள் நாராசமாக எழுதியிருக்கிறார் என்று சொல்வார்கள் போல.

அதோடு, வெகு இயல்பாகப் பழந்தமிழில் பயின்றுவரும் சொற்களில் ஒன்றான “முலை” பற்றி என்ன சொல்லப்போகிறார்கள் என்று தெரியவில்லை. திருப்பூர் அருகே இருக்கும் திருமுருகன்பூண்டி அம்மனின் பெயர் “முயங்குபூண்முலையாள்”. திருவண்ணாமலை அம்மையின் பெயர் உண்ணாமுலை என்று பலருக்கும் தெரியும்.

இவையெதுவும் ஆரியப்பெயர்களன்று. இவை உணர்த்துவது, அக்காலத்தில் இவையெதுவும் தீஞ்சொற்களாக இருந்திருக்கவில்லை என்பதையும் , வெறும் உறுப்புகளைச் சுட்டப் புழங்கிய சொற்கள் என்பதையும் காட்டுகிறது.

சொற்கள் ஒவ்வொருகட்டத்திலும் மருவி அல்லது மறைக்கப்பட்டு வந்திருப்பதால், ஒரு பாடலில் பயின்றுவரும் சொற்கள் சிலவற்றைக்கொண்டு அதை மொத்தமாக இழிந்துபேசுவது ஒன்றும் அறிவார்ந்த செயலுமல்ல. வைதீகத்தை உள்ளே கொண்டுவர முயலும் சங்கியரை எதிர்க்க இது முறையான எதிர்ப்புமல்ல.

இதனால், எதிர்மறையான விளைவுகளே ஏற்படும். வடநாட்டுக்காவிகள் கைகொட்டிச்சிரிப்பர். முருகவழிபாடு செய்தாலும் பெரியாரின் கருத்துகள் மீது ஈர்ப்புடைய எண்ணற்றவர்களைக் கருத்தில்கொண்டாவது இதைத் தவிர்த்திருக்கவேண்டும். என் ஆழ்ந்த வருத்தங்களும், கண்டனங்களும்!!

– செ. அன்புச்செல்வன், இங்கிலாந்து

A1TamilNews.com

From around the web