மருந்து விலை 50% அதிகரிப்பு!

21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது. குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின், தொழுநோய் எதிர்ப்பு மருந்தான டாப்சோன், ஆண்டிபயாட்டிக் மருந்து மெட்ரோனிடசோல், வைட்டமின் சி உள்ளிட்ட மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த மருந்துகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்துள்ள நிலையில், விலை கட்டுப்படியாகவில்லை எனக் கூறி பெரும்பாலான
 

மருந்து விலை 50% அதிகரிப்பு!21 அத்தியாவசிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளது.

குறிப்பாக, பிசிஜி தடுப்பூசி, மலேரியா காய்ச்சல் எதிர்ப்பு மருந்தான குளோரோகுயின், தொழுநோய் எதிர்ப்பு மருந்தான டாப்சோன், ஆண்டிபயாட்டிக் மருந்து மெட்ரோனிடசோல், வைட்டமின் சி உள்ளிட்ட மருந்துகளின் விலை 50 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த மருந்துகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை சீனாவில் அதிகரித்துள்ள நி‌லையில், விலை கட்டுப்படியாகவில்லை எனக் கூறி பெரும்பாலான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறிப்பிட்ட மருந்துகள் தயாரிப்பதை நிறுத்தியுள்ளன.

அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் விலையை 50 சதவிகிதம் வரை உயர்த்தியுள்ளதாக தேசிய மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

https://www.A1TamilNews.com

 

 

From around the web