டல்லாஸில் சூறைக்காற்றுடன் மழை.. கிரேன் விழுந்து இளம்பெண் பலி, 5 பேர் படுகாயம்!

டல்லாஸ்: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்று அடித்ததால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. துணை மின் நிலையங்கள் பாதிப்புள்ளாகி மின்சாரத் தடை ஏற்பட்டது. கிரேன் ஒன்று குடியிருப்பு பகுதியில் சாய்ந்து விழுந்ததில் 29 வயது பெண் பலியாகியுள்ளார். 5 பேர் காயம் அடைந்துள்ளனர். டல்லாஸ் மாநகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் சுழன்று அடித்த காற்று மற்றும் மழையால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளிலும், வீடுகளின் கூரைகள் மீதும் விழுந்ததால் பல குடியிருப்பு
 

டல்லாஸ்: அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியில் மழையுடன் கூடிய பலத்த சூறைக்காற்று அடித்ததால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. துணை மின் நிலையங்கள் பாதிப்புள்ளாகி மின்சாரத் தடை ஏற்பட்டது. கிரேன் ஒன்று குடியிருப்பு பகுதியில் சாய்ந்து விழுந்ததில் 29 வயது பெண் பலியாகியுள்ளார். 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

டல்லாஸ் மாநகரப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் சுழன்று அடித்த காற்று மற்றும் மழையால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளிலும், வீடுகளின் கூரைகள் மீதும் விழுந்ததால் பல குடியிருப்பு பகுதிகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மின் தடையும் ஏற்பட்டதால் சாலைகளின் சிக்னல் விளக்குகளும் வேலை செய்யவில்லை. தமிழர்கள் உட்பட இந்தியர்கள் வசிக்கும் பகுதிகளிலும் பாதிப்பு இருந்தது. திங்கட் கிழமை இரவு 9 மணி வரையிலும் 1 லட்சத்து 75 ஆயிரம் வீடுகளுக்கு மின்சாரம் இல்லை என்று கூறப்படுகிறது.
டல்லாஸில் சூறைக்காற்றுடன் மழை.. கிரேன் விழுந்து இளம்பெண் பலி, 5 பேர் படுகாயம்!டல்லாஸ் டவுண்டவுண் அருகே கட்டிடப் பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உயரமான கிரேன் நிலை தடுமாறி விழுந்ததால் அருகில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது. கார் பார்க்கிங் மற்றும் அபார்ட்மெண்ட்கள் நொறுங்கி விழுந்துள்ளது. 

இடிபாடுகளுக்குள் சிக்கிய 29 வயது பெண்மணி பலியாகியுள்ளார். இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இருவருக்கு பலத்த காயத்திற்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. லேசான காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளார்.

கோப்பல் பகுதியில் மரம் விழுந்து வீடு பாதிப்புக்குள்ளான சுனில், “வீட்டில் நண்பர்களுடன் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். திடீரென காற்று அடித்தது. என்னவென்று உணர்ந்து கொள்வதற்குள், அடை மழை அடித்தது. இடையே சடசடவென மரங்கள் முறிந்து விழும் சத்தங்களும் கேட்டது. மழை நின்ற பிறகு பார்த்தால் பெரிய கிளைகள் தெரு முழுவதிலும் ஆங்காங்கே விழுந்து கிடந்தது. வீட்டின் கூரை மீதும் விழுந்து இருந்தது.
குடியிருப்பு பகுதிகான வாட்ஸ் அப்பில் ஏராளமான பேர், மரங்கள் விழுந்த தகவலை பகிர்ந்தனர். இன்சூரன்ஸ் நிறுவனத்தில் புகார் அளித்த பிறகே மரம் வெட்டுபவர்களை அழைக்க வேண்டும் என்று கூறப்பட்டதால்,  மாலை வரையிலும் மரங்கள் சாலையின் குறுக்கேயும் கிடந்தன, சில நிமிடங்களில் எல்லாமும் மாறி விட்டது,” என்று உணர்ச்சி வசப்பட்டார்.

இயற்கையின் சீற்றம் சில நிமிடங்களில் எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிடுகிறது. உலகின் முன்னேறிய நம்பர் 1 நாடான அமெரிக்காவும்  விதிவிலக்கல்ல. ஆனால் அங்கே உடனுக்குடன் உதவிகள் கிடைத்து விடுகிறது என்பதையும் மறுக்க முடியாது.

 

From around the web