சபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு

சபரிமலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சபரிமலை சீசனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல சில பெண்கள் முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு மறுத்துவிட்டது. இந்த சூழலில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடும்படி பாத்திமா, பிந்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை
 

சபரிமலைக்குச் செல்லும் பெண்களை பற்றி எங்களுக்கு கவலையில்லை – கேரள அரசு

பரிமலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சபரிமலை சீசனையொட்டி நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து சபரிமலைக்கு செல்ல சில பெண்கள் முயற்சி செய்தனர்.

ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசு மறுத்துவிட்டது. இந்த சூழலில் சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கேரள அரசுக்கு உத்தரவிடும்படி பாத்திமா, பிந்து உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்‌‌.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, தற்போதைய சூழலிலல சபரிமலைக்கு செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

சபரிமலை விவகாரம் உணர்வுப்பூர்வமான பிரச்னை என குறிப்பிட்ட நீதிபதிகள், வன்முறை நிகழ்வதை நீதிமன்றம் விரும்பவில்லை எனக்‌ கூறினர். சபரிமலை தொடர்பான வழக்கினை விசாரிக்கும் 7 நீதிபதிகள் அமர்வு விரைவில் அறிவிக்கப்படும் என உறுதி அளித்த நீதிபதிகள், இந்தப் பிரச்னை உணர்வு பூர்வமான பிரச்னை என்பதால் தான் விசாரணை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

 

https://www.A1TamilNews.com

From around the web