கூட்டம் வரலை… செம மூட் அவுட்டில் நாயகன்!

ட்விட்டர் அரசியலுக்கும் கள அரசியலுக்குமான வேறுபாட்டை தினந்தோறும் உணர்ந்து வருகிறார் உலக நாயகன். ட்விட்டர் மூலமாக அரசை எதிர்த்து எழுதி அதன் மூலம் எதிர்ப்பு சக்தியாக தன்னை முன் நிறுத்தினார் நாயகன். களத்தில் இறங்கியபோது தென் தமிழகத்தில் ஓரளவு கூட்டத்தைக் கூட்டிக் காட்டினார். ‘அட பரவால்லியே… இவருக்கே இவ்வளவு கூட்டமா’ என கமெண்ட் வந்தது, அரசியல் வட்டத்தில். ஆனால் நேற்று முன் தினம் அவர் கூட்டிய மகளிர் தின நிகழ்ச்சிக்கு கூட்டமே இல்லாமல் சேர்கள் காலியாகக் கிடந்தன.
 

கூட்டம் வரலை… செம மூட் அவுட்டில் நாயகன்!
ட்விட்டர் அரசியலுக்கும் கள அரசியலுக்குமான வேறுபாட்டை தினந்தோறும் உணர்ந்து வருகிறார் உலக நாயகன்.

ட்விட்டர் மூலமாக அரசை எதிர்த்து எழுதி அதன் மூலம் எதிர்ப்பு சக்தியாக தன்னை முன் நிறுத்தினார் நாயகன். களத்தில் இறங்கியபோது தென் தமிழகத்தில் ஓரளவு கூட்டத்தைக் கூட்டிக் காட்டினார். ‘அட பரவால்லியே… இவருக்கே இவ்வளவு கூட்டமா’ என கமெண்ட் வந்தது, அரசியல் வட்டத்தில்.

ஆனால் நேற்று முன் தினம் அவர் கூட்டிய மகளிர் தின நிகழ்ச்சிக்கு கூட்டமே இல்லாமல் சேர்கள் காலியாகக் கிடந்தன. நம்மவர் பேசும்போது கூட சேர்கள் நிரம்பவில்லை. இது பயங்கர அப்செட் ஆக்கியுள்ளதாம். சினிமா கவர்ச்சி என்பது இறங்கும் வரைதான் எதிர்பார்க்க முடியும். களத்தில் இறங்கியபின்னர்தான் யாருக்கு கூட்டமும் செல்வாக்கும் அதிகம் என்பது தெரியும். அதை இப்போது புரிந்துகொண்ட உலக நாயகன் இன்னும் செல்வாக்கை ஏற்ற என்னவெல்லாம் செய்யலாம் என்று திட்டம் தீட்டுகிறாராம்.

உறுப்பினர் சேர்க்கைக்கும் டார்கெட் கொடுத்து நிர்வாகிகளை உசுப்பேற்றி விட்டுள்ளாராம்.

-கிஸான்

From around the web