இதுவரை உயிரிழப்பு கிடையாது! சென்னை சித்த மருத்துவர் வீரபாகு பெருமிதம்!

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சை மையமாக சென்னையில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகள் 100%சதவீதம் குணமடைந்து வருகின்றனர். தற்போது இங்கு தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் வீரபாகு இது குறித்து செய்தியாளர்களிடம் தகவல்
 

இதுவரை உயிரிழப்பு கிடையாது! சென்னை சித்த மருத்துவர் வீரபாகு பெருமிதம்!மிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா சிகிச்சை மையமாக சென்னையில் உள்ள ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சித்த மருத்துவ முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் நோயாளிகள் 100%சதவீதம் குணமடைந்து வருகின்றனர்.

தற்போது இங்கு தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் குவிந்து வருகின்றனர். இங்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் வீரபாகு இது குறித்து செய்தியாளர்களிடம் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இதன்படி ஜூன் 3ல் 250 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட இந்த மருத்துவ முகாம் தற்போது 465 படுக்கை வசதிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

இங்கு காய்ச்சலுக்கு மட்டும் ‘பாரசிட்டமால்’ ஆங்கில மருந்து பயன்படுத்தப்படுகிறது.இது தவிர கபசுர குடிநீர், சிறப்பு மூலிகை தேனீர் மற்றும் நோயாளியின் தன்மைக்கு மற்ற சித்த மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், தைராய்டு, சிறுநீரக பாதிப்பு போன்ற பக்க நோய்கள் உள்ளவர்களும் சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில் இதுவரை உயிரிழப்பு கிடையாது என்பதே இந்த மருத்துவ முகாமின் சிறப்பாகும்.

இது வரை இங்கு வந்து சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1963 பேர் என தெரிவித்துள்ளார் வீரபாகு.

A1TamilNews.com

From around the web