நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல்! பக்தர்கள் வெளியேற்றம்

குஜராத்: நான்கு திசைகளிலும் சர்ச்சை மேகங்கள் சூழந்து கொண்டு, நித்யானந்தாவை விடாமல் விரட்டிக் கொண்டே இருக்கின்றன. பாலியல் விவகாரம், கடத்தல், கொலை உள்ளிட்ட ஏராளமான புகார்கள் நித்யானந்தா மீது உள்ளன. இந்நிலையில் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆசிரமத்தில் படித்து வரும் தனது 2 மகள்களை மீட்டு தரக்கோரி ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த
 

நித்யானந்தா ஆசிரமத்திற்கு சீல்! பக்தர்கள் வெளியேற்றம்குஜராத்: நான்கு திசைகளிலும் சர்ச்சை மேகங்கள் சூழந்து கொண்டு, நித்யானந்தாவை விடாமல் விரட்டிக் கொண்டே இருக்கின்றன. பாலியல் விவகாரம், கடத்தல், கொலை உள்ளிட்ட ஏராளமான புகார்கள் நித்யானந்தா மீது உள்ளன.

இந்நிலையில் குஜராத் மாநிலம் ஹீராபூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆசிரமத்தில் படித்து ‌வரும் தனது ‌2 மகள்களை மீட்டு தரக்கோரி ஜனார்த்தன ஷர்மா என்பவர் புகார் அளித்திருந்தார். மேலும் குஜராத் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், காணாமல் போன 2 இளம்பெண்களை வரும் 10 ஆம் தேதிக்குள் ஆஜர்ப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதனையடுத்து, ஹீராபூரில் உள்ள ஆசிரமத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து தனியார் பள்ளி வளாகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆசிரமத்தை மாவட்ட ஆட்சியரின் உத்த‌ரவின் பேரில் அதிகாரிகள் மூடினர். ஆசிரமத்தில் தங்கியிருந்த பக்தர்களும் பொதுமக்களும் வெளியேற்றப்பட்டனர்.

https://www.A1TamilNews.com

 

From around the web