நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாற்ற பிரதமர் மோடி முடிவு?

மத்திய அரசின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் பதவியேற்றார். தொலைக்காட்சியிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் வீராவேசமாகப் பேசினாலும், “என் வீட்டில் யாரும் வெங்காயம் சாப்பிடுவதில்லை”, ”புலம் பெயர் தொழிலாளர்களின் பெட்டியை தூக்கிக் கொண்டு போவது தானே” போன்ற பிரபலமான கமெண்டுகளும் பெயர் பெற்றவர் நிர்மலா சீதாராமன். பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பட்டியல்களின் கூட்டுத்தொகை சரியாக இல்லை. மிகவும் குறைவான தொகைக்கே திட்டங்களை அறிவித்தார். அதிலும்
 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மாற்ற பிரதமர் மோடி முடிவு?த்திய அரசின் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதம் பதவியேற்றார். தொலைக்காட்சியிலும் செய்தியாளர் சந்திப்புகளிலும் வீராவேசமாகப் பேசினாலும்,  “என் வீட்டில் யாரும் வெங்காயம் சாப்பிடுவதில்லை”, ”புலம் பெயர் தொழிலாளர்களின் பெட்டியை தூக்கிக் கொண்டு போவது தானே” போன்ற பிரபலமான கமெண்டுகளும் பெயர் பெற்றவர் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டங்களுக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பட்டியல்களின் கூட்டுத்தொகை சரியாக இல்லை. மிகவும் குறைவான தொகைக்கே திட்டங்களை அறிவித்தார். அதிலும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் கூறப்பட்டவை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்.

முன்னாள் நிதியமைச்சர ப.சிதம்பரம், அரசுக்கு நிதி மேலாண்மைக்காக உதவத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஒவ்வொரு நாளும் அரசின் நிதி மேலாண்மை நடவடிக்கைகளை விமர்சனம் செய்தும் வருகிறார் ப.சிதம்பரம். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் செயல்பாடுகள் குறித்து பலதரப்புகளிலிருந்தும் விமர்சனங்கள் வரும் நிலையில், நிதியமைச்சராக பொருளாதார நிபுணர் ஒருவரை நியமிக்கும் திட்டத்தில் பிரதமர் மோடி இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சி வங்கி தலைவராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றி வரும் கே.வி.காமத் கடந்த 27 ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த இவர் ஏற்கனவே ஆசிய வளர்ச்சி வங்கியிலும், இன்போசிஸ் நிறுவனத்திலும் பணியாற்றியவர். இவரை புதிய நிதி அமைச்சராக நியமிக்க பிரதமர் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இன்போசிஸ் முன்னாள் இயக்குனர் மோகன்தாஸ் பாய், நந்தன் நீலகனி பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிகிறது. கடந்த முறை வர்த்தக தொழில் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் பிரபு பெயரும் பட்டியலில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

நவம்பர் மாதம் பிகார் மாநில சட்டமன்றத் தேர்தலும், அடுத்த ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் வரவிருப்பதால் அனைத்தையும் கருத்தில் கொண்டு மத்திய அமைச்சரவையை மாற்றயமைக்க பிரதமர் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நிர்மலா சீதாராமன் முந்தைய மோடி அரசில் ராணுவ அமைச்சராக செயல்பட்டார். தற்போது நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால் வேறு இலாகா ஒதுக்கப்படுமா அல்லது அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது!

A1TamilNews.com

From around the web