20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை உண்மையா? நிதியமைச்சர் என்ன சொல்கிறார் தெரியுமா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 20 லட்சம் கோடி ரூபாய் பற்றிய ரகசியம் எதுவுமில்லை, தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார். 20 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த தொகை பற்றி பலரும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். “உண்மையிலேயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தான் அரசாங்கத்தின் நிகர செலவாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் என்கிற கணக்கே தவறு“
 

20 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணத் தொகை உண்மையா? நிதியமைச்சர் என்ன சொல்கிறார் தெரியுமா?னியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  20 லட்சம் கோடி ரூபாய் பற்றிய ரகசியம் எதுவுமில்லை, தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

20 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த தொகை பற்றி பலரும் சந்தேகங்களை எழுப்புகின்றனர். “உண்மையிலேயே சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு தான் அரசாங்கத்தின் நிகர செலவாக இருக்கும். 20 லட்சம் கோடி ரூபாய் என்கிற கணக்கே தவறு“ என்று சொல்கிறார்களே! இதற்கு உங்களின் பதில் என்ன? என்று அவரிடம் கேட்கப் பட்டது.

இதற்கு பதிலளித்துள்ள நிர்மலா சீதாராமன், “அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த 20 லட்சம் கோடி ரூபாயில் எது எங்கிருந்து வருகிறது என்ற கணக்கை யார் வேண்டுமானாலும் போட முடியும்.

எதையும் நாங்கள் மூடி மறைக்கவில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும், மக்களின் கைகளில் எவ்வளவு பணம் சேருகிறது என்பதே முக்கியம். வங்கிகள் மூலமாக சேருகிறது. அவர்களுக்கு தேவையான முதலீடுகளை திரட்டுவதற்கான உதவித்தொகை, வட்டி மானியம் இவை மூலம் சேருகிறது. இன்று என்னுடைய முக்கிய குறிக்கோள், மக்கள் கைகளுக்கு பணம் செல்கிறதா என்பதே.

அவர்கள் நடத்தும் தொழில்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது. ஊரடங்கினால் தொழில்களை நடத்த முடியாமல் வீடுகளில் முடங்கியிருந்தனர். பிரதமர் நரேந்திர மோடி  பேசும்போது, முதலில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும். பின்னர் அவர்களின் சொத்துகள், தொழில்களுக்கு பாதுகாப்பு தேவை என்றார்.

தொழில்களை மீண்டும் தொடங்குவதற்கு என்ன தேவையோ அவற்றை அளிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இது அரசிடம் இருந்து சென்றுள்ளதா? அல்லது ரிசர்வ் வங்கியிடம் இருந்து சென்றுள்ளதா? என்று அலசிப்பார்ப்பது உங்களின் உரிமை.

இதில் ரகசியம் எதுவுமில்லை. என்னுடைய நோக்கம், தொழில்களை மீண்டும் தொடங்க அவர்களுக்கு தேவையான நிதி கிடைக்க வேண்டும் என்பதே,” என்று கூறியுள்ளார்.

ஆனால் 20 லட்சம் கோடி ரூபாய் என்னென்ன வகையில் செலவழிக்கப்பட்டுள்ளது அல்லது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மட்டும் சொல்லவே இல்லை!

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பார்களே! இது தானோ அது?

A1TamilNews.com

From around the web