என்ஜிகே விமர்சனம்

நடிகர்கள்: சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன் ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன் இசை: யுவன் சங்கர் ராஜா தயாரிப்பு: ட்ரீம் வாரியர் எழுத்து – இயக்கம்: செல்வராகவன் அரசியல் களத்தில் நாவல் எழுதுவது, திரைப்படம் எடுப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அச்சமில்லை அச்சமில்லை ஒரு சீரியஸ் அரசியல் படம். அதன்பிறகு அதையும் தூக்கிச் சாப்பிட்ட படம் அமைதிப்படை. இந்தப் படங்களுக்குப் பிறகு அந்த ரேஞ்சில் அரசியல் பேசிய படம் வேறு எதுவும் இல்லை. ஆய்த
 

டிகர்கள்: சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், பொன்வண்ணன்
ஒளிப்பதிவு: சிவகுமார் விஜயன்
இசை: யுவன் சங்கர் ராஜா
தயாரிப்பு: ட்ரீம் வாரியர்
எழுத்து – இயக்கம்: செல்வராகவன்

அரசியல் களத்தில் நாவல் எழுதுவது, திரைப்படம் எடுப்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அச்சமில்லை அச்சமில்லை ஒரு சீரியஸ் அரசியல் படம். அதன்பிறகு அதையும் தூக்கிச் சாப்பிட்ட படம் அமைதிப்படை. இந்தப் படங்களுக்குப் பிறகு அந்த ரேஞ்சில் அரசியல் பேசிய படம் வேறு எதுவும் இல்லை. ஆய்த எழுத்து போன்ற சில படங்கள் வந்தாலும், அவை அரைவேக்காடாகவே போய்விட்டன.

இந்த என்ஜிகேவாவது ஒரு பக்கா அரசியல் படமாக வந்திருக்கிறதா? அட, டெபாசிட்டாவது தேறுமா?

எம்டெக் படித்துவிட்டு, மாதச் சம்பளத்துக்கு வேலை செய்யப் பிடிக்காமல் சொந்தமாக ஆர்கானிக் விவசாயம் பார்க்கும் இளைஞர் சூர்யா, லோக்கல் எம்எல்ஏ மூலம் மெல்ல அரசியலுக்குள் நுழைகிறார். மெல்ல வளர்ந்து முதல்வரிடமே டீல் பேசும் அளவுக்கு உயர்ந்துவிட, இனியும் அவரை வளர விடக்கூடாது என முடிவு கட்டும் அரசியல்வாதிகள் அவரை ஒழிக்கப் பார்க்கிறார்கள். அதிலிருந்து சூர்யா எப்படி தப்பிக்கிறார் என்பது கதை.

சூர்யா- செல்வராகவன் – யுவன் கூட்டணியில் ஒரு அரசியல் படம் என்றதுமே பெரிய எதிர்ப்பார்ப்பு இந்த என்ஜிகேவுக்கு இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை ஹீரோவும் சரி இயக்குநரும் சரி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. திரைக்கதை, காட்சியமைப்புகளில் ஒரு மேம்போக்கான, வெள்ளைக் காலர் அரசியல்தான் தெரிகிறது.

ஒரு மழை இரவில், நிலத்தில் உழைத்துவிட்டு வந்து அம்மா கையால் சாப்பிட்டுவிட்டு, அப்படியே மனைவியுடன் ஐஸ்க்ரீம் ருசித்துவிட்டு படுத்துறங்கும் காட்சி, சற்றே நாடகத் தன்மையுடன் இருந்தாலும் ரசிக்க முடிந்தது. அதன் பிறகு மனதைத் தொடுவதுபோல ஒரு காட்சியைக் கூட வைக்கவில்லை செல்வராகவன். அதுவும் அரசியல் காய்நகர்த்தல் என்ற பெயரில் ஏகப்பட்ட அபத்தங்கள்.

சூர்யா ஒரு இளம் அரசியல் தலைவராக துடிப்போடுதான் வலம் வருகிறார். ஆனால் ஆர்கானிக் விவசாயி, போராளி, கணவன், காதலன் என வருகிற காட்சிகளில் பெரிதாக ஈர்ப்பில்லை. அதனாலேயே அவரது உழைப்பு வீணாகிறது.

என்ஜிகே விமர்சனம்

சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரண்டு நாயகிகள். இருவருக்கும் பெரிய முக்கியத்துவமில்லை. இவர்களால் படத்துக்கும் எந்த சாதகமும் இல்லை. பெரிய கார்ப்பொரேட் பிஆர். ஆட்சிகளைக் கவிழ்த்துக் காட்டுபவர் என்றெல்லாம் பில்ட் அப் கொடுக்கப்படும் ரகுல் ப்ரீத் சிங், தன் கள்ளக் காதலை வளர்ப்பதில்தான் குறியாக இருக்கிறார்.

பொன்வண்ணன், தேவராஜ், இளவரசு, பாலா சிங், நிழல்கள் ரவி, உமா என ஏகப்பட்ட கேரக்டர்கள். எந்தக் கேரக்டருக்குமே ஒரு முழுமை இல்லை.

சிவகுமாரின் ஒளிப்பதிவு கிராமியக் காட்சிகளில் ரம்யம். யுவனின் பின்னணி இசை, பாடல்கள் பரவாயில்லை என்றாலும் படத்துக்கு அவை எந்த வகையிலும் உதவவில்லை.

செல்வராகவனின் பலம் அழுத்தமான, எங்கும் தொய்வு விழாத திரைக்கதை. இந்தப் படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங்.

மதிப்பீடு: 1.5/5.0

 

From around the web