இந்தியாவின் முப்படை பிரிவுகளுக்கும் புதிய போர் தளவாடங்கள் வாங்க ஒப்புதல்! ராணுவ அமைச்சகம் அதிரடி!

இந்தியா சீனா எல்லைப் பிரச்சனையில் தற்போது இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்வதாக ஒப்புதல் அளித்த நிலையிலும் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. இதைக் குறைப்பதற்காக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்றார். எல்லையில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக முப்படைகளுக்கும் போர் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்
 

இந்தியாவின் முப்படை  பிரிவுகளுக்கும் புதிய  போர் தளவாடங்கள் வாங்க ஒப்புதல்! ராணுவ அமைச்சகம் அதிரடி!ந்தியா சீனா எல்லைப் பிரச்சனையில் தற்போது இருநாடுகளும் படைகளை விலக்கிக் கொள்வதாக ஒப்புதல் அளித்த நிலையிலும் இன்னும் பதற்றம் நீடித்து வருகிறது. இதைக் குறைப்பதற்காக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்றார்.

எல்லையில் மேலும் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

இதன் தொடர்ச்சியாக முப்படைகளுக்கும் போர் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் முப்படையினருக்கு ரூ.38,900 கோடியில் மேலும் போர் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ரஷியாவிடம் இருந்து 21 மிக்-29 தாக்குதல் ரக விமானங்களும், இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 12 சுகோய்-30 எம்.கே.ஐ. போர் விமானங்களும், வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. மேலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 59 மிக்-29 ரக விமானங்களை மேம்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.

248 அஸ்த்ரா ஏவுகணை அமைப்புகள் மற்றும் பினாகா ஏவுகணை அமைப்புகள், நீண்டதூரம் குறிப்பாக 1000 கி.மீ. தொலைவில் உள்ள தரை இலக்கை தாக்கும் ஏவுகணை அமைப்புகள் வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பதற்காக பாதுகாப்பு படையை பலப்படுத்துவதற்காகவும் இந்த ஆயுதங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக ராணுவ அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதில் 80 சதவீதத்திற்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்தே ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட இருப்பதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web