JEE, NEET தேர்வு எழுதுபவர்களுக்காக புது செயலி !மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு காலத்திலும் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்,JEE, NEET தேர்வு எழுதுபவர்களுக்காகவும் நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்ற புதிய செயலியை மத்திய மனித வள மேம்பாடுத் துறை வெளியிட்டுள்ளது. மாதிரித் தேர்வுகளை எழுதும் வகையில் தேசியத் தேர்வு முகமையால் இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயிற்சி வகுப்புக்களின் இழப்பை சரி செய்யும் வகையிலும், தேர்வுகளில் பங்கு
 

JEE, NEET  தேர்வு எழுதுபவர்களுக்காக புது செயலி !மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே31ம் தேதி வரை நான்காவது கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஊரடங்கு காலத்திலும் மாணவர்களின் கற்கும் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும்,JEE, NEET தேர்வு எழுதுபவர்களுக்காகவும் நேஷனல் டெஸ்ட் அபியாஸ் என்ற புதிய செயலியை மத்திய மனித வள மேம்பாடுத் துறை வெளியிட்டுள்ளது.

மாதிரித் தேர்வுகளை எழுதும் வகையில் தேசியத் தேர்வு முகமையால் இந்த ஆப் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயிற்சி வகுப்புக்களின் இழப்பை சரி செய்யும் வகையிலும், தேர்வுகளில் பங்கு கொள்வோர் வீடுகளில் இருந்தே பாதுகாப்பாகக் கற்றுக் கொள்ளவும், உயர்தர மாதிரித் தேர்வுகளை எழுதும் பயிற்சியை மேற்கொள்ளவும் இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

JEE, NEET மட்டுமல்ல மற்ற இதர போட்டித் தேர்வுகளுக்கும் இந்த செயலி மூலம் தயார் படுத்திக் கொள்ள முடியும். தேர்வுகளை எளிதில் பதிவிறக்கம் செய்து இணையம் இல்லாத நேரங்களிலும் அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web